பத்திரிக்கையாளர் காலில் விழுந்து கதறிய நயன்தாரா.. பல வருடங்களுக்கு பின்னர் வெளியான உண்மை..!

Author: Vignesh
24 April 2023, 3:45 pm

தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் என பல உச்ச நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்போது தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டிப் பறப்பவர் நயன்தாரா.

இதில் விக்னேஷ் சிவன் தயாரிப்பு நயன்தாரா நடிக்கும் படமான நெற்றிக்கண் படத்தில் பார்வையற்ற பெண்ணாக நடித்து பெரிய பெயர் பெற்றுள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல 2 காதல் படத்தில் நடித்துள்ளார்.

ரஜினியுடன் நடித்துள்ள அண்ணாத்த படம் தியேட்டரில் வெளியாகி கலவையான விமர்சனம் பெற்றது.

nayanthara - updatenews360.jpg 2

இந்நிலையில், இவர் நடித்த ‘O2’ சரியாக போகவில்லை. மேலும், இப்போது திருமணம் ஆன பிறகு, பல சர்ச்சைகளை தொடர்ந்து கணவருடன் தற்போது, Trip சென்றுள்ளார்.

மேலும், நயன்தாரா பாலிவுட் நட்சத்திர நடிகர் ஷாருக்கான் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் தீவிரமாக நடந்து வருகிறது.

இதனிடையே, நயன்தாரா குறித்து தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதில் நயன்தாரா நிஜ வாழ்க்கையில் பல சர்ச்சைகளில் சிக்கியது அனைவரும் அறிந்தது தான். மேலும் இவரை பற்றி ஒரு காலத்தில் பத்திரிகைகளில் மோசமான கருத்துக்கள் வெளியானது. இதனால் நயன்தாரா பத்திரிகையாளர்களை சந்திப்பதை தவிர்த்து வந்தார்.

Nayanthara - Updatenews360

இதனிடையே, ஒரு நாள் பாஸ் என்கிற பாஸ்கரண் படத்தின் பிரஸ் மீட்டில் பத்திரிகையாளர் ஒருவர் காலில் நயன்தாரா விழுந்ததாக தகவல் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதற்கு காரணம் நயன்தாரா சினிமாவிற்கு வந்த புதிதில் அவரை பற்றி அந்த பத்திரிகையாளர் பெருமையாக பேசியதற்கு அவர் இவ்வாறு நடந்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

  • Allu Arjun bouncer arrested அல்லு அர்ஜுன் பவுன்சர் திடீர் கைது… திரையரங்கில் செய்த செயல்..வெளிச்சத்திற்கு வந்த உண்மை..!
  • Views: - 830

    6

    6