அப்பா வாங்கிய கடன் கழுத்தை அறுத்துச்சு – பணத்திற்காக அந்த தொழில் செய்த விஜய் சேதுபதி!

Author: Shree
24 April 2023, 3:24 pm

தமிழ் சினிமா கண்டெடுத்த பொக்கிஷ நடிகரான விஜய் சேதுபதி ஹீரோ, வில்லன், இளைஞர், முதியவர், கவுரவத் தோற்றம், கல்லூரி மாணவர், திருநங்கை உள்ளிட்ட பலவேறு வித்யாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து ரசிகர்களை மெய்சிலிர்க்க வைப்பார்.

ஆரம்பதில் விஜய் சேதுபதி சறுக்கினாலும் பின்னர் அவரது திறமை அவரை மிகப்பெரிய உச்சத்தில் அமரவைத்துவிட்டது. தென்மேற்கு பருவக்காற்று படத்தில் நடித்து அறிமுகமான இவர் பீட்சா படத்தின் மூலம் பரீட்சயமானார்.

தொடர்ந்து நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, நானும் ரௌடி தான் , சேதுபதி , தர்மதுரை, விக்ரம் வேதா, செக்கச்சிவந்த வானம் என பல ஹிட் படங்களில் நடித்து ஸ்டார் நடிகராக முத்திரை குத்தப்பட்டார். இதனிடையே இந்தியிலும் நடித்துள்ளார்.ஹீரோ கேரக்டர் விட வில்லன் ரோலில் சைலண்டா வெளுத்து வாங்குவார் விஜய் சேதுபதி.

vijay sethupathi

இந்நிலையில் பேட்டி ஒன்றில், நான் நடிக்க சினிமாவுக்கு வந்ததற்கு காரணமே என் அப்பா வாங்கிய 10 லட்சம் ரூபாய் கடனை அடைக்க தான் என்றார். அதற்காக நான் துபாய் சென்று சம்பாதித்தேன். ஆனால், வட்டிக்கு மேல் வட்டி ஏறியது.

அந்த நேரத்தில் சினிமாவுல நடிச்சா நிறைய பணம் கிடைக்கும் என நினைத்து தான் இந்த துறைக்கு வந்தேன். அந்த சமயத்தில் வாடகை வீட்டில் தான் இருந்தேன். மாத கடைசி ஆனால் ஹவுஸ் ஓனர் வந்து கழுத்தை அறுப்பான். வாடகை வீட்டில் வசிப்பதெல்லாம் பாகிஸ்தான் பார்டரில் இருப்பது போல் இருக்கும் என கூறியுள்ளார். இன்று விஜய் சேதுபதி கோடியில் சம்பளம் வாங்குவது குறிப்பிடத்தக்கது.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 669

    1

    1