PULSAR பைக்கில் பதுங்கியிருந்த கொடிய விஷமுள்ள கட்டுவிரியன் பாம்பு : வாகன ஓட்டிகளே உஷார்… ஷாக் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
24 April 2023, 4:54 pm

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அண்ணா சாலை அருகே பேருந்து நிலையம் அமைந்துள்ளது . இந்தப் பேருந்து நிலையத்தில் நாள் ஒன்றுக்கு பல்வேறு மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு பயணிகள் சென்று வருகின்றனர் .

மேலும் தற்போது தொடர் விடுமுறை என்பதால் சுற்றுலாப் பயணிகளும் தற்போது அதிக அளவில் வருகை புரிந்து வருகின்றனர். இந்த சூழலில் கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் கட்டுவிரியன் பாம்பு புகுந்துள்ளது.

இதனைக் கண்ட மக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர் . சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் இருசக்கர வாகனத்தின் இன்ஜின் அருகே மறைந்திருந்த கட்டுவிரியன் பாம்பை பிடித்தனர்.

https://vimeo.com/820482381?share=copy

இருசக்கர வாகனத்தில் விஷம் வாய்ந்த பாம்பு புகுந்து இருந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது . பிடிபட்ட பாம்பை தீயணைப்புத் துறையினர் வனத்துறையிடம் ஒப்படைத்தனர் .

  • Attakathi Dinesh latest news கெத்து காட்டும் அட்டகத்தி தினேஷ்…கிடுகிடுவென சம்பளத்தை உயர்த்தி அசத்தல்…!