நடுரோட்டில் பெண் காவலருக்கு பளார் விட்ட முதலமைச்சரின் சகோதரி கைது : போராட்டத்தின் போது பகீர்.. வைரலாகும் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
24 April 2023, 7:15 pm

நடுரோட்டில் பெண் காவலருக்கு பளார் விட்ட முதலமைச்சரின் சகோதரி : போராட்டத்தின் போது பகீர்.. வைரலாகும் வீடியோ!!

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ஒய். எஸ். ஷர்மிளா தெலுங்கானாவில் தெலுங்கானா ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் என்ற பெயரில் அரசியல் கட்சி ஒன்றை நடத்தி வருகிறார்.

அவருக்கு துணையாக அவருடைய தாய் விஜயம்மாவும் செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் இன்று தெலுங்கானாவில் நிலவும் வேலையில்லா திண்டாட்டத்தை கண்டித்து போராட்டம் நடத்த இருப்பதாக அவர் அறிவித்திருந்தார்.

ஆனால் அவருடைய போராட்டத்தை தடுக்கும் நோக்கில் போலீசார் அவருக்கு வீட்டுக்கு காவல் விதித்தனர். எனவே லோட்டஸ் பாண்ட் பகுதியில் உள்ள அவருடைய வீட்டை சுற்றி ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் வீட்டில் இருந்து வெளியில் வந்த சர்மிளா போராட்டம் நடத்துவதற்கு புறப்பட தயாரானார். அப்போது அங்கு இருந்த போலீஸ் அதிகாரிகள் உங்களுக்கு வீட்டுக்காவல் விதிக்கப்பட்டுள்ளது.

எனவே நீங்கள் இங்கிருந்து வெளியில் செல்ல அனுமதி கிடையாது என்று கூறி தடுத்து நிறுத்தினார். ஆனால் போலீசாரின் தடையை மீறி சர்மிளா அங்கிருந்து புறப்பட்டு செல்ல முயன்றார்.

அவரை தடுத்து நிறுத்த அங்கிருந்த பெண் போலீசார் முயன்றனர். ஆனால் அவர்களில் ஒரு போலீஸ் கான்ஸ்டபிளை தள்ளிவிட்ட ஷர்மிளா அவரை தாக்கினார். மேலும் ஒரு போலீஸ் அதிகாரியை தள்ளிவிட்டு அங்கிருந்து செல்ல முயன்றார்.

இதனால் போலீசாரை தாக்கியது, பணி செய்ய விடாமல் தடுத்தது ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை அங்கிருந்து ஜூப்ளி ஹில்ஸ் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்து சேர்ந்த சர்மிளாவின் தாய் ஜூப்ளி ஹில்ஸ் காவல் நிலையத்திற்குள் செல்ல முயன்றார். அவரை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர்.

அவர்களுடன் கடும் வாக்குவாதம் செய்த ஒய்எஸ் விஜயம்மா அங்கிருந்த பெண் போலீசாரை தள்ளிவிட்டார். இதனால் தெலுங்கானாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆந்திர முதல்வர் ஒய் எஸ் ஜெகன் மோகன் ரெட்டி சகோதரி சர்மிளா, அவருடைய தாய் விஜயம்மா ஆகியோர் மீது அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது பற்றி போலீசார் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்

  • Ilaiyaraja Talk About Yuvanshankar raja யுவன்சங்கர் ராஜாவை மேடையில் பங்கம் செய்த இளையராஜா.. ராஜா ராஜாதான் யா..!!