குழந்தைக்கு உணவு கொடுத்து கொண்டிருந்த தாய் ; பைக்கில் வந்த இருவர் செய்த காரியம் ; போலீசார் விசாரணை!!

Author: Babu Lakshmanan
25 April 2023, 8:42 am

பழனி திருநகரில் வீட்டின் முன்பு நின்ற பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர் ஏழு பவுன் தாலி செயின் பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே சிவகிரி பட்டி ஊராட்சி உட்பட்ட திருநகரில் வசித்து வருபவர் அண்ணாதுரை. இவரது மனைவி விமலா வீட்டின் முன்பாக குழந்தைக்கு உணவு கொடுத்துக் கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர், விமலா கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தாலி சங்கிலி பறித்துக் கொண்டு தப்பி ஓட்டம் பிடித்தனர்.

இதுகுறித்து பழனி நகர காவல் துணை கண்காணிப்பாளர் சிவசக்தி தலைமையிலான போலீசார் ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து, தப்பி உரிய நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பழனியில் வீட்டின் முன்பு குழந்தைக்கு உணவு கொடுத்துட்டு இருந்த பெண்ணிடம் ஏழு பவுன் தங்கச் சங்கிலி பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?