பெற்றோர்களுக்கு எச்சரிக்கை… செல்போன் வெடித்து 8 வயது சிறுமி பலி ; கேரளாவில் நடந்த சோகம்!!!

Author: Babu Lakshmanan
25 April 2023, 2:29 pm

கேரளாவில் செல்போன் வெடித்து 8 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சூர் மாவட்டம் திருவில்வமலைப் பகுதியைச் சேர்ந்தவர் அசோக்குமார். இவர் பஞ்சாயத்து உறுப்பினராக இருந்து வருகிறார். இவருக்கு ஆதித்யஸ்ரீ என்ற மகள் உள்ளார். 8 வயதான இவர், திருவில்வமலை கிறிஸ்ட் நியூ லைப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில், நேற்று இரவு செல்போனில் வழக்கம் போல வீடியோ பார்த்து விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது செல்போன் எதிர்பாராதவிதமாக வெடித்து சிதறியதில், பலத்த காயமடைந்த சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மோசமான பேட்டரி காரணமாக செல்போன் வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது. இது குறித்து பாசயனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுட்டித்தனம் செய்யும் குழந்தைகளை கட்டுப்படுத்தவோ, சமாதானம் செய்யவோ, தற்போதைய காலத்து இளம்பெற்றோர்கள், தங்களின் குழந்தைகளுக்கு செல்போனை கொடுத்து பழக்கப்படுத்தி வருகின்றனர். இதுபோன்ற தொழில்நுட்பங்களினால், உயிரே போகும் என்பதை உணர்த்தியள்ளது இந்த சோகம் சம்பவம்.

  • sai abhyankkar is the music director for allu arjun atlee project அட்லீ-அல்லு அர்ஜுன் படத்துக்கு இவர்தான் மியூசிக்கா? பிளாஸ்ட்டா இருக்கே!