வனப்பகுதியில் 5 வயது குட்டி யானையின் மண்டை ஓடு, எலும்புகள் கண்டெடுப்பு : வேட்டையாடப்பட்டதா? போலீசார் விசாரணை!

Author: Udayachandran RadhaKrishnan
25 April 2023, 2:39 pm

கோவை போளுவாம்பட்டி வனச்சரத்திற்கு உட்பட்ட நரசிபுரம் அருகே உள்ள தேவராயபுரம் வனப்பகுதியில் வனத்துறை ஊழியர்கள் ரோந்து சென்றனர். அப்போது ஒரு பகுதியில் இறந்த யானையின் மண்டை ஓடு மற்றும் சிதறிய எலும்புகள் கண்டறியப்பட்டது.

இதையடுத்து ஊழியர்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து கால்நடை மருத்துவர் குழுவுடன் சென்ற வனத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, இறந்தது சுமார் 5 வயதுடைய ஆண் யானை குட்டி என்பதும், இறந்து சுமார் 4 மாதங்கள் இருக்கலாம் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

யானையின் எலும்புக்கூடு, தந்தம் அதே பகுதியில் சிதறி கடந்துள்ளது. இறந்து நீண்ட நாட்கள் ஆனதால் யானையின் இறப்புக்கான காரணம் குறித்து கண்டறிய முடியவில்லை என மருத்துவர் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

  • Good Bad Ugly Hit of Flop குட் பேட் அக்லி படம் ஹிட்டா? இல்லையா? இன்னும் எவ்வளவு கோடி வசூல் செய்யணும்?