மஞ்சள் காமாலை முதல் பைல்ஸ் வரை… எல்லாவற்றிற்கும் மருந்தாகும் முள்ளங்கி!!!
Author: Hemalatha Ramkumar25 April 2023, 4:26 pm
நமது அன்றாட உணவில் பயன்படுத்தும் காய்கறிகளில் ஒன்று வெள்ளை முள்ளங்கி ஆகும். இதில் ஏராளமான மருத்துவ பயன்கள் அடங்கியுள்ளன. நமது உடலுக்கு அதிக நன்மைகளை தரக்கூடிய காய்கறிகளில், இது மிக முக்கியமான ஒன்றாகும்.
காரமான சுவை உடைய இந்த முள்ளங்கியில் அதிகமான நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் நீர்ச்சத்து மற்றும் பல ஏராளமான சத்துக்கள் அடங்கி உள்ளது. இந்த முள்ளங்கியை காய்கறியாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம் அல்லது முள்ளங்கி சாராக குடிக்கலாம்.
இந்த முள்ளங்கி சாறை நமது வீட்டிலேயே எவ்வாறு தயாரிப்பது என்று இங்கே பார்ப்போம். சுத்தமாக கழுவிய தோல் சீவப்படாத வெள்ளை முள்ளங்கி 50 கிராம் அளவு எடுத்து கொள்ளவும். இதனை சிறிய துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் போட்டு 50 மில்லி தண்ணீர் சேர்த்து நன்றாக அரைக்கவும்.
இதனை நன்கு வடிகட்டி அந்த சாற்றில் இரண்டு ஸ்பூன் அளவு தேன் கலந்து காலை மற்றும் மாலை உட்கொள்ளலாம். இதனுடைய மருத்துவ பயன்களை இங்கே காண்போம்.
தினமும் காலை மற்றும் மாலை அல்லது காலை மட்டும் 50 மில்லி அளவு முள்ளங்கி சாறு தொடர்ந்து குடித்து வருவதால் கல்லீரல் மற்றும் மண்ணீரல் ஆகிய உறுப்புகள் மிகவும் பலம் அடைகிறது.
இதனால் மது அருந்துவதால் ஏற்படக்கூடிய கல்லீரல் வீக்கம், மஞ்சள் காமாலை போன்றவை தடுக்கப்படுகிறது.
இதில் உள்ள நீர்ச்சத்துக்கள் உடலின் சூட்டினை குறைக்கிறது. உடல் சூட்டினால் ஏற்படக்கூடிய தோல் வறட்சி, வறட்டு இருமல், கண் எரிச்சல், சிறுநீர் வெளியேறும் போது ஏற்படக்கூடிய எரிச்சல் போன்றவை குணமாகிறது.
மூலம் (பைல்ஸ்) நோயினால் ஏற்படக்கூடிய ரத்தப் போக்கினை கட்டுப்படுத்துகிறது.
குடல் புண்ணை (அல்சர்) குணமாக்குகிறது.
இதயத்தின் தசைகளை மிகவும் பலமானதாக மாற்றுகிறது. இதனால் இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் வருவதற்கான வாய்ப்பு குறைகிறது.
நுரையீரலில் படிந்துள்ள நச்சுக்கள் மற்றும் கழிவுகளை நீக்குகிறது. இதனால் சுவாசக் கோளாறு போன்ற நோய்கள் குணப்படுத்தப்படுகிறது.
இதில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை ஒரே சீராக வைக்க உதவுகிறது. இதனால் மாரடைப்பு போன்ற நோய்கள் வருவதற்கான வாய்ப்பு குறைகிறது.
இது இன்சுலின் சுரப்பினை அதிகரிக்கிறது. எனவே சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கிறது.
சிறுநீரகத்தில் உள்ள கற்களை சிறுக சிறுக கரைத்து சிறுநீர் வழியாகவே வெளியேற்றுகிறது.
பித்தப்பையில் கற்கள் சேராமல் பார்த்துக் கொள்கிறது.
நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பினை குறைக்கிறது.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.