உயிரிழந்த தாயின் அஸ்தியை வைத்து சிவன் கோவில் கட்டிய பிள்ளைகள் : நெகிழ வைத்த சம்பவம்!!
Author: Udayachandran RadhaKrishnan25 April 2023, 5:37 pm
தூத்துக்குடி மாவட்டம் திருசசெந்தூரை சேர்ந்தவர் கல்யாண குமார் .
பள்ளி ஆசிரியரான இவரது மனைவி சுப்புலட்சுமி கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் கொரனாவினால் உயிரிழந்தார்.
கொரோனாவினால் உயிரிழந்த சுப்புலட்சுமிக்கு கோவில் கட்ட வேண்டும் என இவர்களது பிள்ளைகளான ஜெயசங்கரி மற்றும் மகன் ராகவேந்திரா முடிவு செய்தனர்.
இதனையடுத்து திருச்செந்தூரில் உள்ள குறிஞ்சி நகரில் 25 சென்ட் இடத்தில் சுப்புலட்சுமி என்ற கார்டன் உருவாக்கி 3 வீடுகள் ,கடைகள் என ஒரு தெரு அமைத்து சாலைகள் போட்டு அம்மா நினைவாக கோவில் ஒன்றே கட்டியுள்ளனர்.
கொரோனாவால் உயிரிழந்த அம்மாவின் அஸ்தியை வைத்து, மேல் சிவலிங்கத்தை நிறுவியுள்ளனர். இந்த கோவிலுக்கு சுபலிங்கேஷ்வரர் என பெயரிட்டனர்.
இந்த நிலையில் பணிகள் முடிந்த நிலையில் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. மேலும் அம்மாவின் நினைவாக அறகட்டளை ஏற்படுத்தி எழை மாணவர்களுக்கு கல்விக்கு உதவி செய்ய வேண்டும் ,முதியவர்களுக்கு உணவு வழங்க வேண்டும் எனவும் அதை விரைவில் நிறைவேற்றுவேன் என்றும் மகன் ராகவேந்திரா தெரிவித்தார்..