சும்மா நோண்டி நோண்டி கேட்ட விக்ரம்… கடுப்பாகி கத்திய பா.ரஞ்சித் – தங்கலான் ஷூட்டிங்கில் தகராறு!

Author: Shree
25 April 2023, 8:56 pm

தமிழ் சினிமா உலகில் பிரபல இயக்குனராக வலம் வரும்பவர் பா. ரஞ்சித். 2012ம் ஆண்டு வெளியான அட்டகத்தி என்ற படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அட்டகத்தி படத்தின் வெற்றியை தொடர்ந்து, மெட்ராஸ் திரைப்படத்தை இயக்கி இருந்தார்.

அதனை தொடர்ந்து, ரஜினிகாந்தை வைத்து கபாலி, காலா போன்ற படங்களை இயக்கி இருந்தார். இவ்விரு படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான படம் சார்பட்டா பரம்பரை. இப்படமும் ரசிகர்கள் மத்தியில் அமோக வெற்றியை பெற்றது.

சமீபத்தில் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகி இருந்த படம் நட்சத்திரம் நகர்கிறது. இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராமன், துஷாரா விஜயன் மற்றும் பலர் நடித்திருந்தனர்.படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. அடுத்ததாக விக்ரம் நடிப்பில் ஞானவேல்ராஜா தயாரிப்பில் பா.ரஞ்சித் இயக்கும் திரைப்படம் தங்கலான்.

பூர்வகுடி தமிழர்களின் வரலாற்றை பேசும் வகையில் இந்த படம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. விக்ரம் கடந்த சில வருடங்களாகவே ராஜாப்பாட்டை, தாண்டவம், ஐ, 10 எண்றதுக்குள்ள, இருமுகன், ஸ்கெட்ச், சாமி ஸ்கோயர், கடாரம் கொண்டான், மஹான், கோப்ரா போன்ற தொடர் தோல்வி படங்களில் நடித்து மார்க்கெட் இழந்தார். அதன் பிறகு ஆறுதலாக பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ளார்.

இதனால் தங்கலான் படத்தின் வெற்றிக்காக உயிரை பனையை வைத்து ரிஸ்க்கான காட்சிகளில் நடித்து வருகிறார். மேலும் ஷூட்டிங்கில் பா.ரஞ்சித்திடம் அடுத்தடுத்து என்ன சீன்? எப்படி நடிக்கணும்? நல்லா இருக்குமா என்றெல்லாம் தொடர்ந்து கேள்வி மேல் கேள்வி கேட்டு தொந்தரவு செய்துள்ளார். ஒரு கட்டத்தில் பதில் சொல்லமுடியாமல் திணறிய பா. ரஞ்சித் பலர் முன்னிலையில் விக்ரமிடம் கத்தி திட்டியுள்ளதாகக நம்ப தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 624

    8

    21