நடிகைகள் பாதுகாப்பாக இருங்கள்… போதைக்கு அடிமையான பிரபல நடிகரால் ஆபத்து – திரையுலம் எச்சரிக்கை!

Author: Shree
26 April 2023, 12:06 pm

மலையாள சினிமாவின் பிரபல இளம் நடிகரான ஷேன் நிகம் 2013 ஆம் ஆண்டு சாலைப் படமான நீலாகாசம் பச்சைக்கடல் சுவாச பூமி படத்தில் நடித்து அறிமுகம் ஆனார். அந்த படத்தை தொடர்ந்து கிஸ்மத் , பரவா , கும்பலங்கி நைட்ஸ் , இஷ்க் , பூதகாலம், வெயில் , கொரோனா பேப்பர்ஸ் உள்ளிட்ட பல்வேறு வெற்றித்திரைப்படங்களில் நடித்து இளம் ஹிட் ஹீரோவாக வலம் வந்துக்கொண்டிருக்கிறார்.

இவர் கடைசியாக குக் வித் கோமாளி புகழ் பவித்ரா லட்சுமியுடன் உல்லாசம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். கேரள பெண் ரசிகைகள் அதிகம் கொண்டிருக்கும் நடிகர் ஷேன் நிகம் மற்றும் நடிகர் ஸ்ரீநாத் பாசி இருவரும் போதை பழக்கத்திற்கு அடிமையாகி தயாரிப்பாளர்களுக்கும் மற்ற கலைஞர்களுக்கும் சிக்கல்களை ஏற்படுத்தி வருகிறார். இது நடிகைகளின் பாதுகாப்பிற்கும் கேள்விக்குறியாக இருந்து வந்துள்ளது.

இதனால் மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கம் (அம்மா) உள்ளிட்ட பல்வேறு தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர் சங்கங்களின் தலைவர்கள் கூடி சம்மந்தப்பட்ட இரு நடிகர்களும் நடிக்க தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து கேரளா திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின்பிரதிநிதி எம்.ரஞ்சித், சினிமா துறையில் போதைக்கு அடிமையானவர்கள் பலர் இருந்தாலும், இந்த இரு நடிகர்கள் போதைப்பொருட்கள் பயன்படுத்தியது மட்டுமலலாமல் அவர்களின் செயல்கள் தயாரிப்பாளர்களுக்கும் மற்ற கலைஞர்களுக்கும் பெரும் பிரச்சனைகளை கொடுத்து வந்தது.

எனவே இவர்கள் இருவரும் போதைப்பொருளின் கீழ், ஏதேனும் அசம்பாவிதம் செய்தால், அது சங்கங்கள் மீது குற்றம் சாட்டப்படும், இது நடிகைகளின் பாதுகாப்பிற்கும் கேள்விக்குறியாக உள்ளது என்று ரஞ்சித் கூறினார். எனவே ஷேன் நிகம் மற்றும் ஸ்ரீநாத் பாசி அவர்களின் படங்களில் நடிக்க வேண்டாம் என்று சங்கங்கள் முடிவு செய்துள்ளது. ஆனால் அவர்கள் நடிக்க தடை விதிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

அதுமட்டுமல்லாமல் தான் ஒரு பெரிய நடிகர் என்ற மிதப்பில் ஷேன் நிகம் ஒரு படத்தின் பாதியளவு நடித்துவிட்டு பின்னர் தனது பாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் எடுத்த கட்சிகளையெல்லாம் எடிட் செய்ய வற்புறுத்தினார். இல்லையேல் நான் நடிக்கமாட்டேன் என ப்ளாக்மெயில் செய்தார். அவர் அனுப்பிய மின்னஞ்சல்கள் ஆதாரமாக உள்ளது. எனவே நடிகர்,நடிகைகள் நலன் கருதி பிரச்சினைகள் உள்ளவர்களுடன் பணியாற்றுவதில் எங்களுக்கு சிக்கல் ஏற்படுத்தும் என கூறியுள்ளார். இச்சம்பவம் கேரளத்திரைத்துறையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 732

    3

    0