பெண்ணிடம் செயினை பறித்த திருடன்.. தப்பித்து ஓடும் போது காத்திருந்த டுவிஸ்ட் ; வெளியான சிசிடிவி காட்சிகள்..!!

Author: Babu Lakshmanan
26 April 2023, 2:29 pm

கரூரில் நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட திருடனை பொதுமக்கள் அடித்து துவைத்து போலீசில் ஒப்படைத்த சிசிடிவி காட்சிகள் வைரலாக பரவி வருகிறது.

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வெங்கமேடு, சோழன் நகர் பகுதியை சேர்ந்தவர் காளியப்பன். இவரது மனைவி சரஸ்வதி (48). சரஸ்வதி நேற்று காலை சுமார் 7 மணியளவில் கடைக்கு சென்று பொருட்கள் வாங்கி விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார்.

அப்போது, எஸ்.பி காலனி பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்களில் ஒருவர், சரஸ்வதி அணிந்திருந்த தங்க சங்கிலியை அறுத்துவிட்டு இருசக்கர வாகனத்தை நோக்கி ஓடிவந்துள்ளார்.

அப்போது, அந்த வழியாக வந்த பொதுமக்கள் இந்த பார்த்துவிட்டனர். இதன் காரணமாக இருசக்கர வாகனத்தை இயக்கி வந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு ஓடி வந்த கொள்ளையனை பொதுமக்கள் பிடித்து அடித்து துவைத்து வெங்கமேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

https://player.vimeo.com/video/821194348?h=5605ca282e&badge=0&autopause=0&player_id=0&app_id=58479

போலீசார் விசாரணையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட அந்த நபர் தூத்துக்குடி மாவட்டம், மாப்பிள்ளை ஊரணியை சேர்ந்த எட்வின் ராஜ் (38) என்றும், பல்வேறு திருட்டு சம்பவங்களில் கைதான நபர் என்பது தெரியவந்துள்ளது. மேலும், தப்பி ஓடிய மற்றொரு நபரை போலீசார் தேடி வருகின்றனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?