‘உதயநிதியை அமைச்சராக்க சொன்னதே நாங்க தான்… எங்க செயல்தலைவரைப் பற்றி நானே’… ஆடியோ குறித்து அமைச்சர் PTR விளக்கம்

Author: Babu Lakshmanan
26 April 2023, 4:20 pm

சென்னை ; பாஜக மாநில தலைவர்‌ அண்ணாமலை தான்‌ சொல்லாத ஒன்றை, ஆடியோவாக வெளியிடும்‌ அளவிற்கு கீழ்த்தரமாக இறங்கி விட்டதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விமர்சித்துள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர் ஊழல் மூலம் ரூ.30 ஆயிரம் கோடிக்கும் மேலாக பணத்தை சம்பாரித்து வைத்திருப்பதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியது போன்ற ஆடியோவை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அண்மையில் வெளியிட்டார். இந்த ஆடியோ தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரிதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் சொத்துப்பட்டியலை அண்ணாமலை வெளியிட்ட நிலையில், நிதியமைச்சர் பேசியதாக வெளியான ஆடியோ, திமுகவையே ஆட்டம் காண செய்தது. இதைத் தொடர்ந்து, பிடிஆர் பேசியதாக கூறப்படும் ஆடியோவின் 2வது பாகமும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இந்த ஆடியோக்களை திட்டவட்டமாக மறுத்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், சில உதாரணமான வீடியோக்களையும் வெளியிட்டு, விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது :- எனது இந்த அறிக்கை 22 ஏப்ரல்‌ 2023 அன்று நான்‌ வெளியிட்ட எழுத்துப்பூர்வமான அறிக்கையின்‌ தொடர்ச்சியாகும்‌. இதனைதொடர்வதற்கு முன்னர்‌ நவீன செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்‌ (&) எப்படி போலி காணொளிகளை உருவாக்கும்‌ என்பதற்கான சில உதாரணங்களை நான்‌ காண்பிக்க விரும்புகிறேன்‌.

இத்தகைய உண்மை போன்று தோற்றமளிக்கும்‌ வீழ்யோக்களை கணினி மூலம்‌ உருவாக்க முடியும்‌ என்றால்‌, ஆடியோ கோப்புகளை என்னவெல்லாம்‌ செய்ய முடியும்‌ என்று கற்பனை செய்து பாருங்கள்‌. நேற்று முதல்‌ சமூக வலைதளங்களில்‌ பரவி வரும்‌ ஆடியோ கிளிப்பில்‌ உள்ள எந்த செய்தியையும்‌, எந்த ஒரு தனி நபரிடமோ, தொலைபேசி உரையாடலிலோ அல்லது தனிப்பட்ட உரையாடலிலோ நான்‌ கூறவில்லை என்று உறுதியாக கூற விரும்புகிறேன்‌.

இந்த உரையாடல்‌ தங்களுடன்‌ நடந்தது என்று சொல்ல இதுவரை யாரும்‌ முன்வராதது குறிப்பிடத்தக்கது. பாஜக மாநில தலைவர்‌ யாரோ ஒருவர்‌ குறிப்பிட்ட எந்த நபருடனும்‌ சொல்லாத ஒன்றை, ஆடியோவாக வெளியிடும்‌ அளவிற்கு கீழ்த்தரமாக இறங்கியுள்ளார்‌. அவரது அரசியலின்‌ தரம்‌ இவ்வளவுதான்‌.

மாண்புமிகு முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ அவர்களின் தலைமையில்‌ நாங்கள்‌ ஆட்சிக்கு வந்த இந்த இரண்டு ஆண்டுகளில்‌ பல வரலாறு காணாத சாதனைகளையும்‌, புதிய திட்டங்களையும்‌ , ஒரு மனிதாபிமான நிர்வாகத்தையும்‌ அளித்துள்ளோம்‌. இதையே நாங்கள்‌ திராவிட மாடல்‌ ஆட்சி முறை என்று அழைக்கிறோம்‌. இத்தகைய உயரிய இலக்குகளை அடைய நாங்கள்‌ மிகப்பெரிய நிதி
சீர்திருத்தங்களை மேற்கொண்டு கடந்த பத்தாண்டுகளில்‌ செய்ய முடியாத சாதனைகளை இரண்டே ஆண்டுகளில்‌ சாதித்துள்ளோம்‌.

இவை கடந்த பத்தாண்டுகளில்‌ ஒன்றிய பா.ஜ.க அரசு செய்தவற்றை விட மகத்தான சாதனைகளாகும்‌. இதனை நேரடியாக ஒப்புநோக்கி பார்த்தாலே திராவிட மாடல்‌ ஆட்சியின்‌ செயல்‌ வேகம்‌ தெரியும்‌. இத்தகைய சாதனைகளை சில சக்திகளால்‌ சகித்துக்‌ கொள்ள முடியவில்லை. எனவே அவர்கள்‌ எங்களது சிறப்பான பணிகளை சீர்குலைக்கும்‌ நோக்கத்துடன்‌ நவீன தொழில்நுட்பத்தை மலிவான யுத்திக்காக பயன்படுத்தி இத்தகைய ஜோடிக்கப்பட்ட ஆடியோவை வெளியிட்டுள்ளனர்‌.

முதலமைச்சர்‌ அவர்கள்‌ தமிழ்நாட்டின்‌ ஒற்றை நம்பிக்கையாக மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாட்டிற்கே வழிகாட்டும்‌ ஒளியாக
இருக்கிறார்‌. எங்களது நம்பிக்கை நட்சத்திரமான மாண்புமிகு விளையாட்டுத்துறை அமைச்சர்‌ உதயநிதி ஸ்டாலின்‌ அவர்கள்‌
பொதுமக்கள்‌ மத்தியில்‌, குறிப்பாக இளைஞர்கள்‌ மத்தியில்‌ மகத்தான வரவேற்பை பெற்றுள்ளார்‌. இதைப்‌ பார்த்து
அவரை அமைச்சராக்க வேண்டும்‌ என்று தலைவரிடம்‌ வலியுறுத்தியவர்களில்‌ நானும்‌ ஒருவன்‌.

அனைவரது எதிர்பார்ப்பையும்‌ விஞ்சி அமைச்சர்‌ உதயநிதி அவர்கள்‌ செயல்பட்டு வருகிறார்கள்‌. முதலமைச்சரைப்‌ போலவே கள
ஆய்வும்‌ சிறப்பாக நடத்தி வருகிறார்‌. தமிழக விளையாட்டு துறையை நோக்கு உலகின்‌ கவனத்தை ஈர்த்து வருகிறார்‌.
இப்படிப்பட்ட ஆற்றல்மிகு செயல்வீரரைக்‌ குறித்து நான்‌ எப்படி தவறாகப்‌ பேசுவேன்‌?, என தெரிவித்துள்ளார்.

  • ajith kumar changed the lyrics of god bless u song in good bad ugly அது வேண்டாம் இதை வச்சிக்கோ- இந்த பாடல் வரியை மாற்றியது அஜித்தா?