நண்பனின் மனைவியுடன் கள்ளக்காதல்… பாசமாக மது அருந்த அழைத்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்… போலீசார் விசாரணையில் பகீர்!!

Author: Babu Lakshmanan
27 April 2023, 11:57 am

சத்தியமங்கலம் அருகே நண்பனின் மனைவியிடம் ஏற்பட்ட தகாத உறவின் காரணமாக நண்பன் என்று கூட பாராமல் இரும்பு கம்பியால் பலமாக தலையில் தாக்கி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள சாணர்பதி பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் விண்ணப்பள்ளி அருகே உள்ள தனியார் பள்ளியில் பள்ளி வேன் ஓட்டுனராக பணி புரிந்து வந்துள்ளார்.

இவர் நேற்று காலை சத்தியமங்கலம் – கோவை செல்லும் சாலையில் உள்ள மேட்டூர் வாய்க்கால் பகுதியில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு தனது வாகனத்தின் அருகே இறந்து கிடந்துள்ளார். இது குறித்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் பார்த்து உடனடியாக சத்தியமங்கலம் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த சத்தியமங்கலம் காவல்துறையினர் பிரேதத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து மாரிமுத்து கொலை செய்யப்பட்டதை உறுதி செய்தனர்.

இதைத் தொடர்ந்து, கொலை செய்த நபர் யார் என மோப்பநாய், மற்றும் தடவியல் நிபுணர்கள் உதவியுடன் காவல்துறையினர்‌ கொலையாளியை தீவிரமாக தேடி வந்த நிலையில், இன்று மாரிமுத்துவை கொலை செய்த சத்தியமங்கலம் அருகே உள்ள குமாரபாளையம் பகுதியை சேர்ந்த 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மோகன் என்பவரை இன்று சத்தியமங்கலம் காவல்துறையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

கொலையாளி மோகனிடம் கடந்த 2017ஆம் ஆண்டு மாரிமுத்து ஓட்டுனராக வேலை பார்த்து வந்ததாகவும், அதன் பின்னர் இருவரும் நண்பர்களாக நெருங்கி பழகி வந்ததாகவும், இந்த நிலையில் மாரிமுத்துவின் மனைவி கல்யாணிக்கும் மோகனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

மாரிமுத்துவின் மனைவி கல்யாணி பணி மாறுதல் பெற்று சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு செவிலியராக பணிக்கு வந்த பிறகு அதே அரசு மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனராக பணி புரிந்து வந்த கொலையாளி மோகனிடம் தனது கணவர் மாரிமுத்து அதிகமாக மது அருந்துவதாகவும், அவர் தொடர்ந்து செல்போனில் பல பேரிடம் பேசி வருவதாகவும், அதை தன்னிடம் மறைப்பதாகவும் கூறிய கல்யாணி, அவர் உங்கள் நண்பர்தானே? அவர் யாரிடம் பேசுகிறார் என்பதை நீங்கள் விசாரித்து கூறுங்கள் என‌ கொலையாளி மோகனிடம் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து கொலையாளி மோகனுக்கும், மாரிமுத்து மனைவி கல்யாணிக்கும் தொடர்ந்து நெருக்கமான பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறி உள்ளது.

தொடர்ந்து, மாரிமுத்து மது அருந்திவிட்டு தொடர்ந்து தன்னிடம் தகராறு ஈடுபடுவதாகவும், இவரால் எனக்கும் என்னுடைய குழந்தைக்கும் எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை எனவும், இவர் அதிகப்படியான நபர்களிடம் கடன் வாங்கியுள்ளதாகவும், கடன் கொடுத்தவர்கள் தினமும் வீட்டுக்கு வந்து தன்னிடம் கடன் கேட்பதாகவும், இதனால் தனக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்படுவதாகவும், அவரிடம் விவாகரத்து வாங்க போவதாகவும் கொலையாளி மோகனிடம் தெரிவித்துள்ளார்.

வழக்கமாக மாரிமுத்து மது அருந்தும்போதெல்லாம் தன்னுடைய நண்பர் மோகனை தன்னுடன் அழைத்துச் செல்வதை பயன்படுத்திக் கொண்ட கொலையாளி மோகன், மது அருந்தலாம் என மாரிமுத்துவை அழைத்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு வழக்கமாக மது அருந்தும் இடமான சத்தியமங்கலம் கோவை சாலையில் உள்ள மேட்டூர் அருகே உள்ள வாய்க்கால் பாலத்துக்கு இருவரும் தங்களது இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். அப்போது இருவரும் மது அருந்திய பிறகு மாரிமுத்துக்கு‌ மது போதை தலைக்கு ஏறியதை அறிந்த மோகன், தன்னுடைய காரில் இருந்த இரும்பு கம்பியை பதுக்கி வைத்து எடுத்துக் கொண்டு, மாரிமுத்துவின் பைக்கில் சிறிது தூரம் சென்றுள்ளார்.

பின்னர், இரும்பு கம்பியால் தலையில் பலமாக தாக்கி மாரிமுத்துவை கொலை செய்துவிட்டு அவரது இரு சக்கர வாகனத்தை கீழே தள்ளி விட்டு, விபத்து நடந்தது போல சித்தரித்துவிட்டு தப்பியுள்ளார்.

இந்த வழக்கு தொடர்பாக மாரிமுத்துவை கொலை செய்த நபர் யார்? என ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன் தலைமையில் தனிப்படை அமைத்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்து நிலையில், சத்தியமங்கலம் கோவை சாலையில் காரில் சென்று கொண்டிருந்த கொலையாளி மோகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தகாத உறவின் காரணமாக தனது நண்பன் என்று கூட பாராமல் இரும்பு கம்பியால் தலையில் பலமாக தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 2571

    3

    0