ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் மீது மோசடி வழக்குப்பதிவு.. அதிர்ச்சியில் உறைந்து போன ஓபிஎஸ் தரப்பு ; நிம்மதியில் இபிஎஸ்..!!

Author: Babu Lakshmanan
27 April 2023, 6:28 pm

கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்த ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளர் மீது பெங்களூரூ போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கர்நாடகா சட்டப்பேரவைக்கு வரும் மே 10ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ், குமாரசாமி கட்சிக்கும் என மும்முனை போட்டி நிலவி வருகிறது. தேர்தல் நாள் நெருங்கி வரும் சூழலில் அனைத்து கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, புலிகேசி நகர் தொகுதியில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளராக அன்பரசனையும், ஓபிஎஸ் தரப்பு வேட்பாளராக குமாரையும் நிறுத்தினர். கூட்டணி கட்சியான பாஜக கேட்டுக் கொண்டதன் பேரில் அதிமுக வேட்பாளர் வாபஸ் பெறப்பட்டார். இதனிடையே, முறையான தகவல்கள் இடம்பெறவில்லை எனக் கூறி ஓபிஎஸ் தரப்பு வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.

அதேவேளையில், ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் அதிமுக பெயரில் போலி ஆவணங்களை தாக்கல் செய்து, தேர்தலில் போட்டியிடுவதாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது. மேலும் சட்ட விரோதமாக அதிமுக பெயரை ஓபிஎஸ் தரப்பு பயன்படுத்தியதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனையடுத்து தேர்தல் ஆணையத்திற்கு தவறான தகவல்கள் அளித்ததாக ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் குமார் மீது பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குமார் மீது இந்திய தண்டனைச் சட்டம் 1860 உட்பிரிவு 171 ஜீ -ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது ஓ.பன்னீர்செல்வம் தரப்பினருக்கு மேற்கொண்டு அதிமுக பெயரை பயன்படுத்த முடியாத சூழலை உருவாக்கியுள்ளது. இது எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 303

    0

    0