என்னது உங்க மனைவிக்கு தமிழ் தெரியாதா? நடிகை கஸ்தூரிக்கு பளார் பதில் கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மான்!

Author: Shree
28 April 2023, 9:54 am

சென்னையில் பிறந்து வளர்ந்த தமிழரான இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் உலகளவில் புகழ்பெற்ற இசைக்லைஞராக திகழ்ந்து வருகிறார். இந்தி, தமிழ், மலையாளம் போன்ற மொழிப்படங்களில் பணியாற்றியுள்ள இவரது தந்தையும் இசையமைப்பாளர் தான்.

சிறுவயது முதலே இசைக்கருவிகள் வாசிப்பதில் ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளதால் அவருடைய தந்தையிடமிருந்து பல நுணுக்கங்களைக் கற்றுத் தெரிந்துக்கொண்டு பின்னர் மணிரத்தினம் இயக்கிய ரோஜா படத்தின் மூலம் 1992ஆம் ஆண்டு இசையமைப்பாளராக அறிமுகமானார்.

மெல்லிய இசையால் முதல் படத்திலே ரசிகர்களை கட்டிப்போட்ட ஏஆர். ரஹ்மானுக்கு அப்படத்திற்காக தேசிய விருது கிடைத்தது. தொடர்ந்து பல்வேறு மொழி படங்களுக்கு இசையமைத்திருந்தாலும் அவருக்கு தமிழ் மீதுள்ள பற்று அளவுக்கடந்தவை. பொதுமேடையில் கூட இந்தி மொழியை பலமுறை நிராகரித்து இருக்கிறார்.

அண்மையில் மனைவி சாய்ரா பானுடன் ஒரு விருது விழாவில் கலந்துகொண்டார். அப்போது மேடையில் மனைவி பேச தொடங்கும்போது ரஹ்மான் ‘ஹிந்தி வேண்டாம், தமிழில் பேசு’ என மைக்கிலேயே கூறினார். இருப்பினும் எனக்கு தமிழில் சரளமாக ஆக பேச தெரியாது என அவரது மனைவி ஆங்கிலத்திலேயே பேசி இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.

இந்நிலையில் தற்போது இது குறித்து பிரபல சர்ச்சை நடிகையான கஸ்தூரி, “என்னது ஆர் ரஹ்மான் அவர்களின் மனைவிக்கு தமிழ் வராதா? அவங்க தாய் மொழி என்ன ? வீட்டுல குடும்பத்தில என்ன பேசுவாங்க? என கேள்விகேட்டு ட்விட் செய்திருந்தார். அதற்கு பதிலளித்துள்ள ஏஆர். ரஹ்மான் காதலுக்கு மரியாதை என ரிப்ளை செய்துள்ளார்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!