பொன்னியின் செல்வன் வாய்ப்பை தவறவிட்ட பிரபலங்கள் – இப்போ ஃபீல் பண்ணி என யூஸ்?
Author: Shree28 April 2023, 9:49 pm
கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் 1950 முதல் 1955-ஆம் ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இது மக்களை வெகுவாக கர்ந்ததால் நான்குமுறை கல்கி வார இதழிலேயே மீண்டும் தொடராக வெளிவந்தது. இதற்கு இருந்து பேராதரவை வைத்து 1954-ல் புத்தகமாக வெளியிடப்பட்டது.
தற்போது அந்த புத்தகத்தின் அடிப்படையாக திரைப்படமாக மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியானது. இதில் விக்ரம் ஆதித்த கரிகாலனாக, கார்த்தி வந்தியத்தேவனாக, ஜெயம் ரவி அருண்மொழி வர்மனாக, ஐஸ்வர்யா ராய் நந்தினியாக, திரிஷா குந்தவையாக, பிரகாஷ்ராஜ் சுந்தரசோழனாக, சரத்குமார் பெரிய பழுவேட்டரையராக, பார்த்திபன் சின்ன பழுவேட்டைரையராக நடித்துள்ளார்.
மிகப்பெரும் பொருட்செலவில் உருவான இதன் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியானது. அதன் தொடர்ச்சியாக 2ம் பாகம் இன்று வெளியாகியுள்ளது. இப்படத்தில் திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, சோபிதா, ஜெயம் ரவி , கார்த்தி, உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்நிலையில் இப்படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை தவறவிட்ட நடிகர்கள் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.
அதன்படி வந்திய தேவன் விஜய் , மகேஷ் பாபு அருண்மொழி வர்மனாக , நயன்தாரா பூங்குழலி , அமலா பால் வானிதி , கீர்த்தி சுரேஷ் குந்தவை , அனுஷ்கா நந்தினி போன்ற கேரக்டர்களில் நடிப்பதாக இருந்தது சில காரணங்களால் இவர்கள் நிராகரித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.