அரசியல் பிரமுகருடன் ஆட்டம் போட்ட சுகன்யா?.. அம்பலப்படுத்திய பயில்வான்..!
Author: Vignesh1 May 2023, 7:21 am
பல முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து 90களில் முன்னணி பிரபல நடிகையாக சுகன்யா வலம் வந்தவர்.
நடிகை சுகன்யா 1992 -ம் ஆண்டு இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் நெப்போலியன் நடிப்பில் வெளியான “புது நெல்லு புது நாத்து” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.
இவர் தமிழ் படங்களை தாண்டி தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழி படங்களில் நடித்துள்ளார். நடிகை சுகன்யா ஸ்ரீதர் ராஜகோபாலன் என்பவரை 2002 -ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணம் வாழ்க்கை சில ஆண்டுகளிலேயே முடிவுக்கு வந்தது.
இதனிடையே, திருமணத்திற்கு பின் சுகன்யா ஒரு சில தொலைக்காட்சித் தொடர்களில் நடிகை சுகன்யா நடித்துள்ளார். ஆனால், கணவருக்கோ சுகன்யா நடிப்பது பிடிக்கவில்லை என்பதால், திரைப்படம் மற்றும் டிவியில் நடிக்கக்கூடாது என்று அடுக்கடுக்கான கட்டுப்பாடுகளை போட்டது மட்டும் இல்லாமல், எக்குத்தப்பான சில கேள்விகளையும் கேட்டுள்ளார். இதனால் மனவேதனை அடைந்த சுகன்யா அவரை விவாகரத்து செய்துள்ளார்.
இந்த கசப்பான நிகழ்வுகளுக்கு பிறகு நடிகை சுகன்யா இரண்டாவது திருமணத்தை பற்றி யோசிக்காமல் தனியாகவே இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, நடிகை சுகன்யா விவாகரத்திற்கு பின்னர் பிரபல அரசியல் வாதியுடன் ரகசிய உறவில் இருந்ததாக பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் தற்போது கூறியுள்ளார்.