ஆம்பள சோக்கு கேக்குதா?.. 6-வது காதலனுடன் செட்டிலாகும் பேய் பட நடிகை..!

Author: Vignesh
1 May 2023, 11:30 am

சினிமாவை பொறுத்தவரை காதலித்தவரையே திருமணம் செய்து கொண்டு பல வருடங்கள் பிரியாமல் வாழ்ந்து வரும் எத்தனையோ நடிகர்கள் மற்றும் நடிகைகளை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் சீசனுக்கு ஏற்றார் போல் காதலர்களை கழட்டி விடும் சில நடிகைகளும் நடிகர்களும் இந்த காலகட்டத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த லிஸ்ட்டில் முக்கியமானவராக இருப்பவர் நடிகை கங்கனா ரனாவத் தான்.

kangana ranaut -updatenews360

இந்த நிலையில், பாலிவுட் திரையுலகில் சர்ச்சை நாயகியாக இருக்கும் நடிகை கங்கனா ரனாவத் தமிழிலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது சந்திரமுகி 2 திரைப்படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்திருக்கும் நடிகை கங்கனா ரனாவத்தை பற்றிய பேச்சு தான் இப்போது பரபரப்பை கிளப்பி உள்ளது.

kangana ranaut - updatenews360

பி வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடித்து வரும் சந்திரமுகி 2 திரைப்படத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தற்போது நடித்து வருகிறார். இவர் எப்போதுமே ஒரு சர்ச்சை வளையத்தில் இருக்கும் நடிகை என்பது அனைவரும் அறிந்த விசயம் தான். நடிகை கங்கனா ரனாவத் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் 16 வயதிலேயே வீட்டை விட்டு ஓடி வந்ததாக அவரே தெரிவித்துள்ளார். பிறகு வெளியில் தங்கி வாய்ப்புகளை தேடி வந்த நடிகை கங்கனா ரனாவத்க்கு சினிமா வாய்ப்பும் கிடைத்தது.

chandramukhi-updatenews360

நடிகை கங்கனா ரனாவத் பல சவாலான கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் இவருக்கு வெகு விரைவிலேயே முன்னணி அந்தஸ்தும் கிடைத்தது மட்டுமல்லாமல் இவர் கிட்டத்தட்ட ஐந்து பேருடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்திருக்கிறார் என்பது ஆச்சரியமான உண்மை.

அதிலும், நடிகை கங்கனா ரனாவத்க்கு சினிமா வாய்ப்புகளை கொடுத்த அப்பா வயது தயாரிப்பாளர் ஒருவருடன் கங்கனா மூன்று ஆண்டுகள் வரை தொடர்பில் இருந்து அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தார். ஆனால் அந்த தயாரிப்பாளர் ஒரு மது விருந்தில் தன்னை பலவந்தப்படுத்தியதாக நடிகை கங்கனா ரனாவத் புகார் கொடுத்தது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து ஒரு இளம் நடிகருடன் நடிகை கங்கனா ரனாவத் நெருக்கமாக பழகி வந்தார். ஆனால் அதுவும் சில மாதங்கள் கூட நீடிக்கவில்லையாம். அதன் பிறகு பாலிவுட் நடிகை கஜோலின் கணவர் அஜய் தேவ்கனுடன் நடிகை கங்கனா ரனாவத்க்கும் இடையே நெருங்கிய உறவு ஏற்பட்டதாக அப்போது முணுமுணுக்கப்பட்டது.

மேலும், அவருடன் லிவிங் டு கெதரில் சில வருடங்கள் வாழ்ந்த கங்கனா பின் அவரையும் பிரிந்ததை தொடர்ந்து நான்காவதாக ஒரு வெளிநாட்டு மருத்துவர் உடன் நடிகை கங்கனா ரனாவத் நெருக்கமாக பழகி அதுவும் கசந்து போக குறிப்பிட்ட சில காலம் வரை தான் இருந்தார்.

அதன் பிறகு நடிகை கங்கனா ரனாவத்க்கு நடிகர் ரித்திக் ரோஷன் உடன் நட்பு ஏற்பட்டு, இதன் காரணமாகவே ரித்திக் ரோஷன் தன் மனைவியை விவாகரத்தும் செய்ததாக பாலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டது. ஆனால் கங்கனா இவரையும் கழட்டி விட்டு விட்டார்.

இப்படி ஐந்து பேருடன் நெருங்கிய உறவில் இருந்த நடிகை கங்கனா ரனாவத் இந்த சர்ச்சை நாயகியாக எப்போதும் வலம் வந்துகொண்டு தான் இருக்கிறார். இப்போது ஆறாவதாக ஒருவரை காதலித்து வருவதாகவும், அவர் யார் என்ற தகவல் இன்னும் வெளிவராத நிலையில், எப்போது வேண்டுமானாலும் இவர்களுடைய திருமண அறிவிப்பு வரும் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இந்த காதலாவது திருமணத்தில் முடியுமா என்பதை ரசிகர்கள் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

  • vadivelu trying to hit the car of goundamani and senthil car கவுண்டமணியின் காரை இடிக்க வந்த வடிவேலுவின் கார்! இப்படியெல்லாம் நடந்துருக்கா?