கண்ட நாயெல்லாம் அட்வைஸ் செய்ய வேண்டாம்..- பேட்டியில் அஜித் காட்டம்..!
Author: Vignesh1 May 2023, 2:30 pm
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக சிறந்து விளங்கிக்கொண்டிருக்கும் அஜித் குடும்பத்தின் ஏழ்மை காரணமாக மெக்கானிக் வேலை செய்துவந்தார். அங்கேயே கார், பைக் ஓட்ட கற்றுக்கொண்டார். அப்போது பார்ப்பதற்கு அழகாக இருந்த அஜித்திற்கு மாடலிங் செய்ய வாய்ப்புகள் கிடைக்க நிறைய விளம்பரங்களில் நடித்தார். பின்னர் சில காட்சிகளில் நடிக்க திரைப்பட வாய்ப்புகள் அவரை தேடி வந்தது.
இதில் வரும் வருமானம் மூலம் தனக்கு விருப்பமான மெக்கானிக் தொழிலை சொந்தமாக ஆரம்பிக்கலாம் என்று எண்ணி இதனை செய்ய ஆரம்பித்தார். பின்னர் சினிமாவே வாழ்க்கையாகிவிட்டது. அஜித்தை சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தது பிரபல பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் தான். ஆம், எஸ்பிபியின் மகன் சரணின் நெருங்கிய பள்ளி தோழனாக அஜித் இருந்துள்ளர். அப்போது அடிக்கடி அவரது வீட்டிற்கு செல்ல எஸ்பிபியின் குடும்ப நண்பராகியுள்ளார்.
ஆரம்பத்தில் விளம்பர படங்களில் நடித்து வந்த அஜித் நண்பன் எஸ்பி சரணின் ஆடைகளை வாங்கி அணிந்துக்கொண்டு நிறைய விளம்பரங்களில் நடித்திருக்கிறாராம். அதன்பிறகு ‘பிரேம புஸ்தகம்’ என்ற தெலுங்கு படத்தில் எஸ்பிபி தான் அஜீத்தை அறிமுகம் செய்து வைத்தார். அன்று ஏழ்மையில் தத்தளித்த அஜித் இப்போது பெரிய ஹீரோவாகி விட்டார்.
நடிகர் அஜித் என்றால் தற்போதைய இளம் தலைமுறைக்கு எப்போதும் அமைதியானவர், எந்த பிரச்சனைக்கும் செல்லமாட்டார், பேட்டி கூட கொடுக்க மாட்டார் என்று தான் தெரியும் என்றும், தான் உண்டு தன் வேலை உண்டு என இருப்பார் என்றுதான் தெரியும்.
ஆனால் நடிகர் அஜித் சினிமாவில் ஆரம்பகட்டத்தில் வேறு விதமாக தான் இருந்து இருக்கிறார். அதாவது, ஆரம்ப காலகட்டத்தில், அஜித் பேட்டிகளில் தான் நினைப்பதை ஓப்பனாக பேசி பல நேரங்களில் அது பெரும் சர்ச்சையானது.
மேலும், “அஜித் பைக் ரேஸ், கார் ரேஸ் என செல்வதை விட்டுவிட்டு சினிமாவில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் எனறும், அல்லது சினிமாவை விட்டு விட வேண்டும்” என பிரபல தயாரிப்பாளர் கேயார் ஒருமுறை அட்வைஸ் கொடுத்து உள்ளார்.
இது குறித்து ஒரு பேட்டியில் பதில் கொடுத்த அஜித், ‘கண்ட நாயெல்லாம் அட்வைஸ் செய்ய தேவை இல்லை’ என தெரிவித்து இருக்கிறார். ஒருகாலத்தில் இப்படி இருந்த அஜித் தான் தற்போது மொத்தமாக இப்படி மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது.