Mouse வாங்கச் சென்ற இடத்தில் இளைஞருடன் சேர்ந்து இளம்பெண் செய்த செயல் ; இறுதியில் நிகழ்ந்த ஷாக் சம்பவம்…!!

Author: Babu Lakshmanan
1 May 2023, 7:09 pm

கோவை ; கோவை காந்திபுரம் அருசூக லேப்டாப் திருட்டில் ஈடுபட்ட இளம்பெண் மற்றும் இளைஞரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

கோவை காந்திபுரம் பகுதியில் எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் என்ற கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் விற்பனையாளராக விஷ்ணு என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 29ம் தேதி மாலை ஒரு இளைஞர் மற்றும் ஒரு இளம்பெண் கடைக்கு வந்து கம்ப்யூட்டருக்கு மவுஸ் பார்க்க வேண்டும் எனக்கூறி உள்ளனர்.

அப்போது விற்பனையாளர் அந்த இளைஞருக்கு மவுஸ் காண்பித்து கொண்டிருந்த போது, அந்நேரத்தை பயன்படுத்தி உடன் வந்த அந்த இளம்பெண் டிஸ்ப்ளேவில் வைக்கப்பட்டிருந்த 60,000 மதிப்புள்ள ஒரு மடிக்கணினியை எடுத்து அவரது பேக்கில் ஒளித்து வைத்துள்ளார்.

பின்னர் அங்கு வந்த விற்பனையாளர் டிஸ்ப்ளே வில் இருந்த மடிக்கணினி இல்லாததை பார்த்து இளம்பெண்ணிடம் கேட்டுள்ளார். முதலில் அந்த இளம் பெண் தான் எடுக்கவில்லை என மறுத்ததை தொடர்ந்து, பேக்கை காண்பிக்கும்படி விற்பனையாளர் வலியுறுத்தியுள்ளார்.

பிறகு அந்த இளைஞர் இளம்பெண்ணிடம் இருந்து பேக்கை வாங்கி அதிலிருந்த மடிக்க்கணினியை எடுத்து விற்பனையாளரிடம் திரும்ப கொடுத்துவிட்டு மவுஸும் வாங்காமல் கடையை விட்டு வெளியே சென்றுள்ளனர். தற்போது சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

  • Coolie OTT Rights சும்மா கெத்தா விலை போன ‘கூலி’ படம் ..இப்பவே பாதி வசூல் ஓவர்.!