தினமும் என்ன குழம்பு செய்வது என்று யோசனையாகவே உள்ளதா? அப்படியென்றால் பொரிச்ச குழம்பு செய்து பாருங்கள்!!!

Author: Hemalatha Ramkumar
1 May 2023, 7:34 pm

தினமும் சாம்பார், புளிக் குழம்பு என்று என்ன தான் திட்டம் போட்டாலும் ஒரு நாளாவது இது தவிர்த்து வேறு எதாவது குழம்பு செய்யலாமே என்ற யோசனை பல பெண்களுக்கு எழும். அப்படி நீங்கள் சாம்பார், புளிக் குழம்பு தவிர்த்து புதிதாக ஏதேனும் குழம்பு வைக்க வேண்டும் என்று நினைத்தால், பொரிச்ச குழம்பு ஒரு நல்ல ஆப்ஷனாக இருக்கும். இது வித்தியாசமானது மட்டும் அல்ல, செய்வதற்கும் மிகவும் சுலபமானது. வேலைப் பளு அதிகமாக இருக்கும் நாளன்று நீங்கள் சிம்பிள் ஆக இந்தக் குழம்பை செய்து விட்டு அப்பளம் வைத்து சாப்பிடலாம்.

தேவையான பொருட்கள்:

தக்காளி – 1 (நறுக்கியது)
வெங்காயம் – 1 (நறுக்கியது)
உருளைக் கிழங்கு – 1 (நறுக்கியது)
முருங்கைக் காய் – 1 (நறுக்கியது)
மிளகாய்த் தூள் – 2 ஸ்பூன்
தண்ணீர் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

தாளிக்க:

எண்ணெய் – 1 ஸ்பூன்
கடுகு – 1 ஸ்பூன்

செய்முறை விளக்கம்:

முதலில் வாணலில் எண்ணெய் ஊற்றி அதில் தாளிப்பதற்கு எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடானதும் கடுகு போடவும்.
அடுத்து பொடியாக நறுக்கிய வெங்காயம் போட்டு பொன் நிறம் ஆகும் வரை வதக்கிக் கொள்ளவும்.
தக்காளி மற்றும் கருவேப்பிலை சேர்த்து வதக்கிக் கொள்ளும். அடுத்து உருளைக் கிழங்கு மற்றும் முருங்கைக் காய் சேர்த்து வதக்கவும்.
அதில் மிளகாய் தூள் மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
காய்கள் வெந்த உடன் அடுப்பை அணைத்து சூடான சாதத்துடன் பரிமாறுங்கள்.

நீங்கள் உங்களுக்குப் பிடித்தால் கத்திரிக்காய் போன்ற வேறு காய்கறிகளையும் சேர்த்துக் கொள்ளலாம். முன்பு கூறியது போல், இந்த குழம்புக்கு வெறும் அப்பளம் கூட வைத்து சாப்பிடலாம் அல்லது முட்டை ஆம்லெட் போட்டு சாபபிட்டால் அட்டகாசமான காம்பினேஷனாக இருக்கும்.

  • Premgi Amaren marriage newsநடிகர் பிரேம்ஜிக்கு இப்படி ஒரு பிரச்சனையா..மனைவி சொன்ன அதிர்ச்சி தகவல்..!
  • Views: - 3003

    0

    0