ப்பாஹ்… என்ன மனசு! ஐஸ்வர்யா ராய்யை இனிமேலாவது நடிக்க விடுங்கள் – ரசிகருக்கு கணவர் கொடுத்த பதில்!

Author: Shree
1 May 2023, 8:37 pm

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் 1950 முதல் 1955-ஆம் ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இது மக்களை வெகுவாக கர்ந்ததால் நான்குமுறை கல்கி வார இதழிலேயே மீண்டும் தொடராக வெளிவந்தது. இதற்கு இருந்து பேராதரவை வைத்து 1954-ல் புத்தகமாக வெளியிடப்பட்டது.

தற்போது அந்த புத்தகத்தின் அடிப்படையாக திரைப்படமாக மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியானது. இதில் விக்ரம் ஆதித்த கரிகாலனாக, கார்த்தி வந்தியத்தேவனாக, ஜெயம் ரவி அருண்மொழி வர்மனாக, ஐஸ்வர்யா ராய் நந்தினியாக, திரிஷா குந்தவையாக, பிரகாஷ்ராஜ் சுந்தரசோழனாக, சரத்குமார் பெரிய பழுவேட்டரையராக, பார்த்திபன் சின்ன பழுவேட்டைரையராக நடித்துள்ளார்.

மிகப்பெரும் பொருட்செலவில் உருவான இதன் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியானது. அதன் தொடர்ச்சியாக 2ம் பாகம் அண்மையில் வெளியானது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படம் குறித்து ஐஸ்வர்யா ராயின் கணவர் அபிஷேக் பச்சன் படக்குழுவினருக்கு வாழ்த்து கூறி பதிவிட்டிருந்தார்.

இதற்கு ரசிகர் ஒருவர், ஐஸ்வர்யா ராய் நிறைய படங்களில் நடிக்கட்டும் அவரை நடிக்க விடுங்கள் மகள் ஆராதனாவை பார்த்துக்கொள்ளுங்கள் என கூறியுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள அபிஷேக் பச்சன், “நடிக்க விட வேண்டுமா? சார்.. அவர் எதை செய்வதற்கும் என் அனுமதி தேவையில்லை. குறிப்பாக அவர் அதிகம் விரும்பும் ஒரு விஷயத்திற்கு நான் தடை விதிப்பதில்லை” என அபிஷேக் பச்சன் அவருக்கு கூலாக பதில் கொடுத்து இருக்கிறார். அவரின் இந்த கருத்துக்கு ரசிகர்கள் பலரும் ஆதரவு கொடுத்துள்ளனர்.

  • sr prabhu reply for comments on actor shri health issues விஷயம் தெரியாம பேசுறவங்க “Beep”… ஸ்ரீ விவகாரத்தில் அசிங்கமாக திட்டிய தயாரிப்பாளர்!