கம்பீருக்கு பாடம் எடுத்த விராட் கோலி… இருவருக்கும் சண்டை நடந்தது எப்படி..? பரபரப்பான மைதானம்… வைரலாகும் வீடியோ!!

Author: Babu Lakshmanan
2 May 2023, 8:59 am

நேற்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் போது பெங்களூரூ அணி வீரர் விராட் கோலி, லக்னோ அணியின் ஆலோசகர் கம்பீருக்குஇடையே மோதல் ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஏறக்குறைய பாதி போட்டிகள் முடிவடைந்து விட்ட நிலையில், யார் பிளே ஆஃப்பிற்கு செல்வார்கள் என்பது இன்னும் தெரியாத ஒன்றாக இருந்து வருகிறது. அப்படியிருக்கையில் பெங்களூரூ – லக்னோ அணிகளுக்கு இடையிலான ஆட்டம் லக்னோவில் நேற்று நடைபெற்றது.

இதில், முழுக்க முழுக்க பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக மைதானம் இருந்ததால், பெங்களூரூ அணி 9 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதைத் தொடர்ந்து, பேட் செய்த லக்னோ அணியும் ரன்களை குவிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்தது. இதனால், அந்த அணி 108 ரன்களுக்கு ஆல்அவுட்டானது.

இந்தப் போட்டியின் போது ஆரம்பத்தில் இருந்தே கோலி மிகவும் ஆக்ரோஷமாக காணப்பட்டு வந்தார். லக்னோ வீரர் க்ரூனால் பாண்டியா அவுட்டான போது முதலில் வாயில் விரல் வைத்து உஷ்ஷ்ஷ்.. என்று சொல்வது போல சைகை காட்டி கோலி, பின்னர் அப்படி செய்ய கூடாது என்று சைகை செய்து ஹார்ட் காட்டினார்.

முன்பு இருஅணிகள் விளையாடி போட்டியில் பெங்களூரூ அணியை கடைசி பந்தில் லக்னோ அணி வீழ்த்தியது. அப்போது, பெங்களூரூவில் ரசிகர்களை பார்த்து உஷ்ஷ்ஷ்.. என்று லக்னோ அணியின் ஆலோசகர் கம்பீர் காண்பித்து மிரட்டினார்.

https://twitter.com/im_markanday/status/1653109855333539840?s=20

எனவே, கம்பீருக்கு பதிலடி எடுக்கும் விதமாகவும், எப்போதும் அன்பு செய்ய வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக, கோலி அவ்வாறு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது மைதானத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதன்பின் லக்னோ வீரர் நவீன் உல் ஹக் அவுட்டான போதும், விராட் கோலி தனது சீண்டலை விடவில்லை. அப்போது கோலிக்கும், இவருக்கும் மோதல் ஏற்பட்டது. களத்திலேயே வார்த்தைகளால் நவீனை கோலி லெப்ட் ரைட் வாங்கினார். இதனால், இரண்டு தரப்பிற்கும் இடையிலான மோதல் பெரிதாகியது.

இதனிடையே, ஐபிஎல் கிரிக்கெட் விதிகளை மீறியதாக பெங்களூரூ அணி வீரர் விராட் கோலி, லக்னோ அணியின் ஆலோசகர் கம்பீருக்கு போட்டியின் ஊதியத்தில் இருந்து 100 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

https://twitter.com/im_markanday/status/1653109855333539840?s=20

ஏற்கனவே, கம்பீர் டெல்லி அணியில் விளையாடிக் கொண்டிருக்கும் போது, கோலியுடன் மோதல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

  • my scenes were deleted in goat movie said by black padi சண்ட போட்டு படத்துல நடிச்சேன்; ஒரு பயனும் இல்ல- வேதனையில் GOAT பட நடிகர்… அடப்பாவமே!
  • Close menu