மனச உடைச்சுட்டாரு… எந்த பெண்ணுக்கும் இப்படி ஆகக்கூடாது : மனம் நொந்து போன ரச்சிதா!!

Author: Udayachandran RadhaKrishnan
2 May 2023, 1:22 pm

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரச்சிதா. இதே தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த தினேஷ் என்பவருடன் காதலில் விழுந்து அவரை திருமணம் முடித்துக்கொண்டார்.

இதனை தொடர்ந்து இவர் சரவணன் மீனாட்சி இரண்டாவது மற்றும் மூன்றாவது சீசன்களில் ஹீரோயினாக நடித்தார். இந்த தொடரின் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவராக ஆனார்.

சீரியல்களை தவிர சில ரியாலிட்டி ஷோக்களில் நடுவர் ஆகவும் பங்கேற்று வந்தார். இவருகென்று தனியொரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இன்ஸ்டாகிராம் பக்கங்கள்,பேஸ்புக் பக்கம் என்று ரசிகர்கள் உருவாக்கி அவர்கள் இவரை கொண்டாடி வந்தனர்.

வெள்ளித்திரையில் இருக்கும் ஹீரோயின்களுக்கு நிகராக அதிக ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர்.

தற்போது ரக்‌ஷிதா இரண்டாவது திருமணம் செய்து கொள்ள இருப்பதாக சில செய்திகள் வெளியானது. இதனிடையே, இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து, கணவருடன் ஒன்று சேர்ந்து விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு வாய்ப்பே இல்லை என்று கூறிவிட்டதாக சீரியல் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றனர்.

அதற்கு காரணம், கணவர் தினேஷ் உடன் அடிக்கடி நடக்கும் பிரச்சனையால் கருத்து வேறுபாடு ஏற்பட்டதுதான்.. மேலும் ரச்சிதாவிற்கு உடல்நிலை பிரச்சனையால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியவில்லையாம்.

இதனால் தினேஷ் ரச்சிதா மீது இதை வைத்தே பிரச்சனையை ஏற்படுத்தினாராம். இந்த விஷயத்தால்தான் இருவரும் விவாகரத்து செய்ய முவு செய்துள்ளதாக பிரபல சினிமா பத்திரிகையாளர் கூறியுள்ளார்.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 670

    5

    4