தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக ஜொலித்துக்கொண்டிருக்கும் நடிகை சமந்தா சென்னை பல்லாவரத்து பெண் என்பதே பலரால் நம்ப முடியாத உண்மை. இவர் அப்பா தெலுங்கு, அம்மா மலையாளி. ஆனால் தான் பிறந்து வளர்ந்ததெல்லாம் தமிழ் நாட்டில் என்பதால், தென்னிந்திய கலவையாக மிளிரும் சமந்தா ஆரம்பத்தில் மாடலிங் பெண்ணாக ரூ. 100 ரூ. 200க்கெல்லாம் கடைகளில் வெல்கம் கேர்ளாக பணியாற்றி இருக்கிறார்.
தமிழில் மாஸ்கோவின் காவிரி படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து விண்ணைத்தாண்டி வருவாயா, நான் ஈ, நீ தானே என் பொன்வசந்தம் , கத்தி , தெறி சூப்பர் டீலக்ஸ் என பல்வேறு ஹிட் படங்களில் நடித்துள்ளார். தற்போது அவரது நடிப்பில் சகுந்தலம் திரைப்படம் கடந்த14ம் தேதி வெளியானது. இப்படத்தை பெரிதும் நம்பியிருந்த சமந்தாவுக்கு பெரும் தோல்வி தான் கிடைத்தது.
இதனிடைய மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார். இதற்காக பல மாதங்களாக சிகிச்சை எடுத்து வரும் சமந்தா இன்னும் முழுமையாக குணமாகவில்லை. இந்நிலையில் தற்போது ஐஸ் பாத் டிரீட்மென்ட் எடுக்கும் புகைப்படத்தை சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களின் அனுதாபத்தை தேடியுள்ளார்.