கெஞ்சிக் கேட்ட நயன்தாராவுக்கு அடிச்சது ஜாக்பாட் : பெரிய சம்பவம் LOADING!!
Author: Udayachandran RadhaKrishnan2 May 2023, 4:49 pm
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகை நயன்தாரா. இவர் ஐயா படத்தில் அறிமுகமாகி தற்போது கோலிவுட்டின் சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்கு உயர்ந்துள்ளார்.
என்னதான் இவரின் தனிப்பட்ட வாழ்க்கை கடும் விமர்னத்துக்கு ஆளானதோ, சினிமாவில் மார்க்கெட் இன்னும் உச்சத்தில் தான் உள்ளது. விமர்சனங்களை தகர்த்தெறிந்து தற்போது சினிமாவிலும், வாழ்க்கையிலும் கொடிக்கட்டி பறந்து வருகிறார்.
இந்த நிலையில் அண்மையில் மேடையில் மணிரத்னத்திடமே நேரடியாக படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டிருந்தார். பொன்னியின் செல்வன் படத்தை முடித்த கையோடு தற்போது அடுத்த பட வேலைகளில் மும்முரம் காட்டி வருகிறார் மணி.
குறிப்பாக தனது உறவினரான கமல்ஹாசனுடன் நாயகன் படத்திற்கு பிறகு மீண்டும் அவரை வைத்து இயக்கவுள்ளார். கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கு பிறகு மணியுடன் கமல் இணைகிறார்.
உதயநிதி, ராஜ் கமல் இணைந்து தயாரிக்க உள்ளதாகவும், கமலுக்கு ஜோடியாக முதன்முறையாக நயன்தாரா நடிக்க உள்ளதாகவும், ஏஆர் ரகுமான் இசையமைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
கமல் 234 படத்திற்கு புரமோ இம்மாதம் 3ஆம் வாரத்தில் தொடங்கும் என கூறப்படுகிறது. அதற்கு முன்னதாக படம் மற்றும் படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.