‘புஷ்பா’ பட பாணியில் செம்மரம் கடத்தல்… தமிழகத்தை சேர்ந்த 8 பேர் கைது : விசாரணையில் பகீர்!!

Author: Udayachandran RadhaKrishnan
2 May 2023, 7:05 pm

சேஷாசலம் வனப்பகுதியில் இருந்து செம்மரங்களை வெட்டி சிலர் கடத்துவதாக சித்தூர் எஸ் பி ரிஷாந்த் ரெட்டிக்கு இன்று அதிகாலை ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் அடிப்படையில் சித்தூர் மாவட்டத்தில் உள்ள பூத்தலப்பட்டு, குடிப்பாலா ஆகிய காவல் நிலைய போலீசார் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.

சித்தூர்- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் எம் சி ஆர் கிராஸ் அருகே பூத்தலபட்டு போலீசார் வாகன சோதனை நடத்திய போது அந்த வழியாக செம்மரங்களை கடத்தி வந்த இரண்டு கார்களை மடக்கி அவற்றில் இருந்து எட்டு செம்மரக்கட்டைகளை கைப்பற்றி தமிழ்நாட்டின் வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்த எட்டு பேர் உட்பட சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த மூன்று பேரையும் கைது செய்தனர்.

எஸ்பி உத்தரவின் பேரில் சித்தூர்-கடப்பா நெடுஞ்சாலையில் வாகன சோதனை மேற்கொண்ட குடிபாலா போலீசார் அந்த வழியாக செம்மரங்களை கடத்திச் சென்ற இரண்டு கார்களை கைப்பற்றி அவற்றில் இருந்த நான்கு செம்மரக்கட்டைகளை கைப்பற்றி வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ஐந்து பேரை பிடித்து கைது செய்தனர்.

நான்கு கார்கள், 12 செம்மரக்கட்டைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் 16 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர்கள் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு செம்மரக்கட்டைகளை கடத்தி செல்வது தெரியவந்தது. கைப்பற்றப்பட்ட செம்மரக்கட்டைகளின் மதிப்பு 40 லட்ச ரூபாய் என்று போலீசார் தெரிவித்தனர்.

  • Bala and Kanja Karuppu relationship OFFICE BOY-யா வேல செஞ்ச பிரபல காமெடி நடிகர்…வாழ்க்கை கொடுத்த இயக்குனர் பாலா..!
  • Views: - 484

    0

    0