பேருந்து நிலையத்தில் ஓட ஓட விரட்டி வாலிபரின் கையை வெட்டிய நபரால் பரபரப்பு… விசாரணையில் ஷாக் : கோவையில் பயங்கரம்!!

Author: Udayachandran RadhaKrishnan
2 May 2023, 9:59 pm

கோவையில் வாலிபரை பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி வெட்டிய நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை அருகே கோவை புதூர் அறிவொளி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த் 34. செவ்வாய்க்கிழமை பாப்பம்பட்டி பிரிவு அருகே உள்ள செல்வ ராஜா மில் பகுதியில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது அவரை கோவைபுதுரை சேர்ந்த சந்துரு என்பவர் ஓட ஓட விரட்டி அரிவாளால் ஆனந்தை வெட்டினார். இதில் ஆனந்துக்கு இடது கை பலத்த சேதமடைந்தது.

மேலும் கழுத்துப் பகுதியில் ஒரு வெட்டு விழுந்தது. இவ்வாறு இளைஞரை ஓட ஓட விரட்டியதால் அங்கு பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த மக்கள் சிதறி ஓடினர்.

இதனை அப்பகுதி பொதுமக்கள் அதிகளவில் கூடியதால் ஆனந்தை அப்படியே விட்டுவிட்டு சந்துரு தான் வந்த இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு சாவுகாசமாக கத்தியை துடைத்துக் கொண்டு கிளம்பிவிட்டார்.

அப்போது உன்னை பின்னர் வந்து வெட்டிக்கிறேன் டா என்று சொல்லிவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து ஆனந்திடம் விசாரித்த போது சந்துருவின் மனைவியை கடந்த இரண்டு வருடமாக தான் தனது வீட்டில் வைத்து குடும்பம் நடத்தி வருவதாகவும் இது சம்பந்தமாக ஏற்கனவே முன்விரோதம் இருந்ததாகவும் தெரிவித்தார்.

படுகாயம் அடைந்த ஆனந்தை அப்பகுதி பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இது பற்றி தகவல் அறிந்த சூலூர் காவல் ஆய்வாளர் மாதையன் உடனடியாக நிகழ்வு இடத்திற்கு விரைந்து வந்து சந்துருவை தேடும் பணியை மேற்கொண்டு குற்றவாளியை கைது செய்தனர்.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 401

    0

    0