அருமை நண்பரின் மறைவு வேதனையளிக்கிறது.. ஆத்மா சாந்தியடையட்டும் ; நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்!

Author: Babu Lakshmanan
3 May 2023, 2:13 pm

பிரபல நகைச்சுவை நடிகர் மனோபாலாவின் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இயக்குநர், குணச்சித்திர மற்றும் நகைச்சுவை நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர் மனோபாலா. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளில் 700 படங்களுக்கு மேல் நடித்துள்ள இவர், இயக்குநர் பாரதிராஜாவிடம் ஆரம்ப காலதில் உதவி இயக்குநராக பணியாற்றினார்.

1982ல் ஆகாய கங்கை எனும் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். பின்னர், ரஜினியின் ஊர்க்காவலன், பிள்ளை நிலா, சிறைபறவை, என் புருஷன்தான் எனக்கு மட்டும் தான் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட படங்ளை இயக்கியுள்ளார். சந்திரமுகி, அரண்மனை, துப்பாக்கி, கலகலப்பு உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தற்போது விஜய் நடித்து வரும் லியோ திரைப்படத்தில் நடித்து வந்தார். மேலும், சதுரங்க வேட்டை உள்ளிட்ட 3 திரைப்படங்களை தயாரித்துள்ளார். குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் இவர் தனது யூடியூப் சேனல் மூலம் பிரபலங்களை பேட்டியெடுத்து வருகிறார்.

இந்த நிலையில், சமீபத்தில் லேசான மாரடைப்பு ஏற்பட்டதால், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு தற்போது ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் குணமடைந்து வீடு திரும்பினார்.

இந்த நிலையில் இன்று அவர் உடல் நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், நடிகர் ரஜினிகாந்த் விடுத்த இரங்கல் செய்தியில், “பிரபல இயக்குநரும், நடிகருமான, அருமை நண்பர் மனோபாலாவுடைய இறப்பு எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய அனுதாபங்கள். அவரது ஆத்மா சாந்தியடையட்டும்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 431

    0

    0