அவர் நடிச்ச காட்சியை தூக்கக்கூடாது… லோகேஷுக்கு விஜய் கட்டளை!

Author: Shree
4 May 2023, 11:12 am

தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வந்த நடிகர் மனோ பாலா, நல்ல நடிகரும், இயக்குனரும், சதுரங்க வேட்டை போன்ற தரமான படங்களின் தயாரிப்பாளர் என கோலிவுட் ரசிகர்களின் பிரபலமானவராக இருந்து வருகிறார். பார்ப்பதற்கு ஒல்லியான மெலிந்த உடலமைப்பை கொண்டிருந்த மனோபாலா அதுவே அவரின் காமெடியை ரசிக்கும்படியாக அமைந்து.

ஆனால் உண்மையில் அவரது உடல் இப்படி இருக்க காரணம், அதிகமான சிகரெட் பிடிக்கும் பழக்கமும், குடி பழக்கும் தான். இதை அவரே பேட்டியில் கூட வெளிப்படையாக கூறியிருக்கிறார். சம்பாதிக்கும் பணத்தை மருத்துவரிடம் கொடுத்தே அழித்து வந்துள்ளார். எலும்புகள் எல்லாம் பலவீனமாகி இனிமேல் சிகரெட் பிடித்தீங்கன்னா இறந்துவிடுவீர் என டாக்டர் கூறியதால் எல்லாத்தையும் நிறுத்திவிட்டார்.

ஆனாலும், அவரது உடல் பாதிப்படைந்தது அடைந்தது தான். இதனால் இதனிடையே அவ்வப்போது மாரடைப்பால் அவதி பட்டு வந்தார். இந்நிலையில் 69 வயதாகும் அவர் நேற்று மரணமடைந்தார். கடைசியாக விஜய்யின் லியோ படத்தில் நடித்துள்ளார். விஜய் நேற்று அவரது உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். இந்நிலையில் லியோ படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் மனோ பாலா நடித்த எந்த காட்சியும் எடிட்டிங்கில் நீக்கக்கூடாது என விஜய் கேட்டுக்கொண்டாராம். அது தான் நாம் அவருக்கு செய்யும் கடைசி மரியாதை என கூறியுள்ளார்.

  • my scenes were deleted in goat movie said by black padi சண்ட போட்டு படத்துல நடிச்சேன்; ஒரு பயனும் இல்ல- வேதனையில் GOAT பட நடிகர்… அடப்பாவமே!