கோவில் நிதியில் விதிமீறல்… அன்றைக்கே பாஜக சொன்னது : அமைச்சர் சேகர்பாபுவை வசை பாடிய அண்ணாமலை!!

Author: Udayachandran RadhaKrishnan
4 May 2023, 6:46 pm

அரசின் பிடியிலிருந்து கோயில்களை விடுவிக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகச் செலவுகளுக்காக, இந்து சமய அறநிலையத்துறை சட்டப்படி, கோவில்கள் வருமானத்திலிருந்து, 12% ஒதுக்கப்படுகிறது.

அதற்கு மேல், கோவில் நிதியை எடுத்து, வாகனங்கள் வாங்குவது என்பது விதி மீறலாகும்.

கோவில் நிதியை அறநிலையத் துறையின் இதர செலவுகளுக்குப் பயன்படுத்தக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றமே கூறியிருக்கும் நிலையில், சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் சேகர்பாபு பேசுகையில், கோவில் நிதியில் வாகனங்கள் வாங்கியிருக்கிறோம் என்று அந்த விதிமீறலை நியாயப்படுத்தியிருக்கிறார்.

அமைச்சரின் இந்தச் செயல் வன்மையான கண்டனத்துக்குரியது. திமுக அரசின் இத்தகைய விதிமீறல்களை எதிர்த்தே, அரசின் பிடியிலிருந்து கோவில்களை விடுவிக்க வேண்டும் என்று தமிழக பாஜக சார்பாக வலியுறுத்தி வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்