தமிழகத்தில் இன்று அனைத்து கடைகளுக்கும் விடுமுறை : கோயம்பேடு மார்க்கெட் மூடல்!!!

Author: Udayachandran RadhaKrishnan
5 May 2023, 8:30 am

ஆண்டுதோறும் மே 5ஆம் தேதியன்று வணிகர் சங்கங்கள் சார்பில் வணிகர் தின மாநாடு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ஈரோட்டில் இன்று மாநாடு நடைபெறுகிறது.

இதனிடையே வணிகர் தின மாநாட்டை ஒட்டி மே 5ஆம் தேதியான இன்று மொத்த சில்லறை வணிக நிறுவனங்கள், உணவகங்கள், கடைகள் ஆகியவற்றுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வணிகர்கள் மாநாட்டில் பங்கேற்க வசதியாக இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோட்டில் நடைபெறும் வணிகர் தின மாநாட்டில், தமிழகம் முழுவதும் இருந்தும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வணிகர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

20 ஏக்கர் பரப்பளவில் பந்தல் அமைக்கப்பட்டிருப்பதுடன் பஸ், கார், டூ விலர்கள் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்த பார்க்கிங் இடவசதியும் செய்யப்பட்டுள்ளது. 1000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் எனத் தெரிகிறது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 568

    0

    0