பைக்கில் சென்றவரை துரத்தி சென்று தூக்கி வீசிய யானை : ஆனைக்கட்டி அருகே அரங்கேறிய சோகம்!!

Author: Udayachandran RadhaKrishnan
5 May 2023, 9:17 am

கோவை மாவட்டம் ஆனைகட்டி, மாங்கரை, தடாகம், ஆகிய பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக காணப்படும். குறிப்பாக காட்டு யானைகளின் நடமாட்டம் இங்கு அதிகமாக காணப்படும், என்பதால் மாங்கரையில் இருந்து ஆனைகட்டி மலை பாதையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த கவனத்துடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தூமனூர் பகுதியை சேர்ந்த ராஜப்பன்(48) என்பவர் சேம்புக்கரை பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது பூதிமேடு பகுதியில் எதிரில் வந்த காட்டுயானை அவரை துரத்தியதாக தெரிகிறது.

இதில் நிலை தடுமாறிய அவரை அந்த காட்டுயானை தாக்கியதில் ராஜப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் ராஜப்பன் உடலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் மாவட்ட வன அலுவலரின் அறிவுரைப்படி அவரது குடும்பத்தினருக்கு உடனடி நிவாரண தொகையாக 50,000 ரூபாய்க்கான காசோலை வழங்கப்படும் என வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • it is not easy to direct salman khan ரொம்ப கஷ்டம், அவர் இஷ்டத்துக்குதான் நடிப்பாரு- எல்லை மீறிப்போன முருகதாஸ் பட ஹீரோ?