மெட்டு போட்டு பாடி அசத்திய வனத்துறை அதிகாரி… பாடலை கேட்டு மெய்மறந்து நின்ற யானை ; வைரலாகும் வீடியோ!!

Author: Babu Lakshmanan
5 May 2023, 9:43 pm

கோவை ; பொள்ளாச்சி அருகே கோழிகமுத்தி யானைகள் வளர்ப்பு முகாமில் பாட்டு பாடி அசத்திய வன அதிகாரியின் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகம் உலாந்தி வனசரகத்தில் அமைந்துள்ளது கோழிகமுத்தி, மற்றும் வரகளியார் யானைகள் வளர்ப்பு முகாம் உள்ளது. இங்கு 26 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. கோழிகமுத்தி முகாமில் பொறுப்பு அதிகாரியாக பணியாற்றி வருபவர் வனவர் சோழமன்னன்.

இன்று முகாமில் உள்ள அபிநயா என்ற வளர்ப்பு யானையை குளிப்பாட்டி யானை பாகன் யானைக்கு உணவு அளிக்க அழைத்து வரும்போது, அங்கு பணியில் இருந்த வனவர் சோழமன்னன் யானையை நிறுத்தி அதை உற்சாகப்படுத்தும் விதமாக “என்னவென்று சொல்வதம்ம யானை அவள் பேரழகை” என்ற சினிமா பாடலின் மெட்டுகளோடு பாட துவங்கிய வனவரின் பாடலை கேட்ட யானை மெய்மறந்து நின்றது.

இந்த பாடலை படிய வனவர் கூறுகையில் யானைகள் வெறும் கட்டளைகளுக்கு மட்டுமே கீழ் பணிகிறது அவைகளுக்கும் உணர்வுகள் உண்டு நம் வனத்தின் காவலனாக உள்ள யானைகளை வாழ்த்தி பாடும் போது, யானைகள் மனம் மகிழ்ந்து உற்சாகம் அடைகிறது. என் பாடலை கேட்டு யானை உற்சாகமாக தலையாட்டி தும்பிக்கை அசைப்பது எனக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்று வனவர் தெரிவித்தார்.

  • Sivakarthikeyan New Message to fans on his birthday ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்… பிறந்தநாளன்று சிவகார்த்திகேயன் எடுத்த அதிரடி முடிவு!
  • Svg%3E