“இதயம் ஒரு ரகசிய சுரங்கம்”.. காதலில் விழுந்த பொன்னியின் செல்வன் குட்டி நந்தினி?..- புலம்பும் ரசிகர்கள்..!

Author: Vignesh
6 May 2023, 12:15 pm

சாரா அர்ஜுன் இவர் திரைப்படங்கள் மற்றும் விளம்பரங்களில் நடித்துள்ள ஒரு இந்திய குழந்தை நட்சத்திரம் ஆவார்.

சாராவின் தந்தை ராஜ் அர்ஜுன் இவர் ஒரு இந்தி நடிகர் ஆவார். காலு, சப்ரி மற்றும் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி அவர்களின் ரவுடி ரத்தோர் உள்ளிட்ட பல இந்தி மொழி திரைப்படங்களில் நடித்து உள்ளார்.

sara - updatenews360

மேலும் இவர் இயக்குநர் ஏ. எல். விஜய் அவர்களின் தெய்வத்திருமகள் திரைப்படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவரது தாயார் சான்யா ஒரு நடன ஆசிரியர் ஆவார். மற்றும் அவளுடைய பெற்றோர்கள் முதலில் போபால் வசித்து வந்தனர், பின்னர் இவரது பெற்றோர் 2000 ஆம் ஆண்டு முதல் மும்பையில் குடிப்பெயர்ந்தனர்.

sara - updatenews360

‘தெய்வத்திருமகள்’, ‘சைவம்’ ஆகிய படங்கள் மூலம் பிரபலமான சாரா சமீபத்தில் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் ‘சில்லுக் கருப்பட்டி’ திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

பொன்னியின் செல்வன் படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் நடித்துள்ள நந்தினி கதாபாத்திரத்தின் சிறு வயது கதாபாத்திரத்தில் நடிகை சாரா அர்ஜூன் நடித்துள்ளார்.

sara - updatenews360

இதனிடையே, சினிமாவில் அறிமுகமாகி குழந்தை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இப்போ குழந்தை சாராவா என வாயை பிளக்கும் அளவுக்கு தற்போது தன்னுடைய புகைப்படங்களை இணையாளத்தில் பதிவிட்டுள்ளார்.

மாபெரும் வெற்றியடைந்த பொன்னியின் செல்வன் படத்தில், சிறு வயது நந்தினி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில், ரசிகர்கள் அனைவருக்கும் ஷாக் கொடுக்கும் விதமாக பேபி சாரா நடித்துள்ள காட்சியின் புகைப்படம் சமிபத்தில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

sara - updatenews360

மேலும், கொட்டேஷன் கேங் எனும் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள பேபி சாரா புகைப்பிடிக்கும் காட்சியில் நடித்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும், நம்ம பேபி சாராவா இது! என கேள்வி கேட்டு வந்தனர்.

sara - updatenews360

இந்நிலையில், ps 2 படத்தில் தான் நடித்த காட்சிகளை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு அதற்கு கேப்ஷனாக தமிழில்,”இதயமும் ஒரு ரகசிய சுரங்கம்” என பதிவிட்டு இருந்தது. இதனைப் பார்த்த ரசிகர்கள் சாரா காதலில் விழுந்து விட்டாரா? என புலம்பி வருகின்றனர். மேலும், மறுபுறம் இந்த ஐடியே சாரா அர்ஜுனோடது இல்லை என்றும் அவருக்கு தமிழே தெரியாது என்றும் கிண்டலடித்து வருகின்றனர்.

sara - updatenews360
  • srinidhi shetty not able to act in ramayana movie because of yash பிரம்மாண்ட படத்தில் நடிக்க முடியாதபடி பண்ணிட்டாங்க? பிரபல ஹீரோவை கைகாட்டும் ஸ்ரீநிதி ஷெட்டி…