கிரிக்கெட் ரசிகர்களே… இன்று சென்னை – மும்பை ஆட்டம்.. வானிலை என்ன சொல்லுது-னு தெரியுமா..? தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்ட அப்டேட்..!!

Author: Babu Lakshmanan
6 May 2023, 1:53 pm

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை – மும்பை அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மழையினால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதா..? என்பது குறித்த வெதர் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் பரபரப்பான கட்டத்தில் உள்ளது. யார் பிளே ஆஃப்பிற்கு செல்வார்கள் என்பதில் கடும் போட்டி நிலவி வருகிறது. இந்த நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரின் 49வது ஆட்டத்தில் 4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்சும், 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்சும் மல்லுக்கட்டுகின்றன. சுமார் 4 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை – மும்பை அணிகள் மோதுவதால், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதுவரை 10 ஆட்டங்களில் ஆடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 வெற்றி, 4 தோல்வி, ஒரு முடிவில்லை என்று 11 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் இருக்கிறது. பேட்டிங்கில் கான்வே, கெய்க்வாட், ரஹானே, ஷிவம் துபே, மொயீன் அலி, தோனி என பெரும் படையே இருப்பதால் சென்னை பேட்டிங்கில் வெயிட்டான அணியாகவே இருந்து வருகிறது. ஆனால், பந்துவீச்சில் சொல்லிக்கொள்ளும் அளவில் இல்லை. துஷர் தேஷ்பாண்டே (17 விக்கெட்), பதிரானா (7 விக்கெட்) ஆகியோர் விக்கெட்டுக்களை எடுத்தாலும், ரன்களை வாரி வழங்கி வருவது பெரும் பின்னடைவாக உள்ளது.

நடப்பு தொடரில் மும்பையை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியது சென்னை அணிக்கு மேலும் தெம்பு கொடுக்கும். அதேபோல, தொடக்கத்தில் தடுமாற்றத்தை சந்தித்த மும்பை இந்தியன்ஸ் அணி, பின்னர் எழுச்சி பெற்று வெற்றிப்பாதைக்கு திரும்பியுள்ளது. இதுவரை 9 ஆட்டங்களில் ஆடி 5ல் வெற்றி, 4-ல் தோல்வி என்று 10 புள்ளிகளுடன் இருக்கிறது. அந்த அணியில், பேட்டிங் மற்றும் பவுலிங் சிறந்த அணியாக உள்ளது. எனவே, இன்றைய போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது.

ஏற்கனவே சென்னையிடம் தோல்வி அடைந்திருப்பதால் அதற்கு பதிலடி கொடுக்க மும்பை வீரர்கள் வரிந்துகட்டுவார்கள் என்பதால் களத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை. போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்றுதீர்ந்து விட்டதால் ஸ்டேடியமும் ரசிகர்களின் ஆர்ப்பரிப்பால் அதிரப்போகிறது.

இதனிடையே, தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. அந்த வகையில், இன்றும் சில மாவட்டங்களில் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, சென்னையில் நடக்கும் இன்றைய ஐபிஎல் போட்டி மழையால் பாதிக்கும் அபாயம் உள்ளதா..? என்று ரசிகர்கள் அச்சப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், சென்னையில் மழை நிலவரம் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். அதாவது, சென்னையில் இன்று லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், ஆனால், சென்னை – மும்பை அணிகளுக்கு இடையிலான ஆட்டம் தடைபடும் அளவுக்கு மழை பெய்ய வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளார். எனவே, போட்டி நிச்சயம் முழுமையாக நடக்கும் எனக் கூறியுள்ளார்.

தமிழ்நாடு வெதர்மேனின் இந்த அப்டேட் சென்னை – மும்பை ரசிகர்களிடையே குஷியை ஏற்படுத்தியுள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 553

    0

    0