கன்னித்தன்மை விவகாரம்.. 6 மாதமாக வாயை திறக்காத டிஜிபி.. இப்போது மட்டும் ஏன்? நாராயணன் திருப்பதி கேள்வி!!

Author: Udayachandran RadhaKrishnan
7 May 2023, 10:36 am

தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “சிதம்பரம் தீட்சிதர்களின் குழந்தைகளுக்கு இரு விரல் பரிசோதனை செய்ததாக பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் பரப்பப்பட்டு வருகின்றன. சட்டவிரோதமாக, மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளவர் தமிழகத்தின் தலைவர் அல்லது தமிழை ஆட்சி செய்பவரான மேதகு ஆளுநர்.

ஆனால், டி ஜி பி அவர்கள் ஆளுநருக்கு பதிலளிக்காமல் ஊடகங்கள் பரப்புவதாக சொல்வது விசித்திரமாக உள்ளது. வியப்பளிக்கிறது. மேலும், “சட்ட ஆலோசகரின் அறிவுரைப்படி, இரண்டு சிறுமியர் மட்டும் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டனர். அவர்களிடம், பெண் டாக்டர்கள் பரிசோதித்தனர். அவர்களை இருவிரல் கன்னித்தன்மை பரிசோதனைக்கு உட்படுத்தவில்லை” என்றும் டி ஜி பி அவர்கள் கூறியுள்ளார்.

குழந்தை திருமணம் நடந்ததாக புகார் அளிக்கப்பட்ட புகாருக்கு பெற்றோர்கள் மீது நடவடிக்கை எடுத்ததோடு நில்லாமல், குழந்தைகளை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியது ஏன்? குழந்தைகளை வீட்டிலிருந்து வெளியே அழைத்து சென்றது ஏன்? அதற்கு அனுமதி அளித்தது யார்? அந்த குழந்தைகள் தாங்கள் தாக்கப்பட்டதாகவோ அல்லது துன்புறுத்தப்பட்டதாகவோ புகார் அளித்தனரா? அப்படி புகார் அளிக்கப்பட்டிருந்தால் அதன் முதல் தகவல் அறிக்கை எங்கே? குழந்தை திருமணம் நடத்தியதற்கு மருத்துவ பரிசோதனை செய்ய சட்டத்தில் இடமிருக்கிறதா?

உச்ச நீதி மன்றத்தின் அறிவுறுத்தலின் படி குழந்தைகளை எந்த விதமான சோதனைக்கும் உட்படுத்தக்கூடாது என்பது தெரியாதா? அப்படி வீடு புகுந்து அந்த குழந்தைகளை அழைத்து சென்ற போலீசார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதா? முறையான காரணம் இல்லாமல் குழந்தைகளை மருத்துவ பரிசோதனை செய்த மருத்துவர்கள் யார்? அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதா? சிறு குழந்தைகளை மன உளைச்சலுக்கு உள்ளாக்க வேண்டியது அவசியம் என்ன?

சட்ட விரோதமாக அந்த குழந்தைகளை அழைத்து சென்று பரிசோதனை செய்திருந்தால், அழைத்து சென்ற போலீசார் மற்றும் பரிசோதனை செய்த மருத்துவர்கள் மீது POCSO சட்டம் பாய வேண்டுமா? மேலும், கடந்த 25/10/2022 அன்று இரு தீக்ஷிதர் குடும்பங்கள், காவல்துறையினர் குழந்தை திருமணத் தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்தி உச்சநீதிமன்ற விதிமுறைகளை மீறி குழந்தைகள் விசாரணை மற்றும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவது குறித்து கடிதம் எழுதியுள்ளதை டிஜிபி மறுப்பாரா?

இன்று மறுப்பு தெரிவிக்கும் டி ஜி பி குற்றச்சாட்டு அவர்கள், அந்த கடிதங்களுக்கு, அவர்களுக்கு அப்போதே மறுப்புதெரிவிக்காதது ஏன்? குழந்தைகளின் தாயாரை இரவு 11.30 மணி வரை காவல் நிலையத்தில் வைத்திருந்ததாக அவர்கள் குறிப்பிட்டதை மறுப்பாரா டி ஜி பி? ஆறு மாதத்திற்கு மேல் அந்த குடும்பங்களின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்காதவர் நேற்று திடீரென அதை மறுப்பதற்கென்ன காரணம்?

குற்றச்சாட்டு கடுமையானது என்பதோடு குற்றச்சாட்டை முன் வைத்தவர் ஆளுநர் என்பதாலும், இந்த விவகாரம் இன்று சில அமைச்சர்களும் மறுத்துள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து சுதந்திரமான விசாரணையை உறுதி செய்ய சென்னை உயர்நீதி மன்ற நீதிபதியின் தலைமையில் விசாரணை நடத்த டிஜிபி அவர்கள் தயாரா? அது வரை பாதிக்கப்பட்ட அந்த பெண் குழந்தைகள் மற்றும் அவர்களின் குடும்பத்தாருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். உண்மைகள் வெளிவர வேண்டும். நீதி நிலைநாட்டப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

  • national award missed for paradesi movie because of bala video தேசிய விருதுக்கு ஆப்பு வைத்த வீடியோ! தன் கையை தானே சுட்டுக்கொண்ட இயக்குனர் பாலா?