ரஜினி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி… இன்று இரவு 12 மணிக்கு வெளியாகிறது முக்கிய அப்டேட்!!

Author: Udayachandran RadhaKrishnan
7 May 2023, 5:02 pm

நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார். படத்தின் வெளியூட்டு தேதியை அண்மையில் படக்குழு வெளியிட்டது. இதை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் அவருடைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் ‘லால்சலாம்’ திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதற்காக மும்பை சென்றுள்ளார். அவர் படத்தின் படப்பிடிப்புக்காக மும்பை செல்லும் பொழுது விமான நிலையத்தில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ கூட இன்று காலையில் வைரல் ஆனது.

இதனை தொடர்ந்து தற்பொழுது லால் சலாம் படத்தின் புதிய அப்டேட் ஒன்று இரவு 12 மணிக்கு வெளியாகும் என படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ரஜினிகாந்தின் கதாபாத்திர பெயரை அறிவிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

  • secret relationship with VJ's Priyanka பிரியங்காவை வைத்து விளையாடும் விஜய் டிவி.. 8 வருட ரகசிய உறவு : பிரபலம் பகீர்!