மொய்தீன் பாயாக கலக்கும் ரஜினிகாந்த்.. வெளியானது லால்சலாம் அப்டேட்… மாஸ் காட்டும் புதிய லுக்..!!

Author: Babu Lakshmanan
8 May 2023, 11:11 am

நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு வெளியிட்டது. இதை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இதனிடையே, அவருடைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் ‘லால்சலாம்’ திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார். லால் சலாம் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு திருவண்ணாமலையில் முடிவடைந்த நிலையில், அடுத்த கட்டமாக மும்பையில் ரஜினிகாந்த் நடிக்கும் காட்சிகளை படமாக்குகின்றனர். மும்பை சென்றுள்ளார். இதற்காக அவர் மும்பை செல்லும் பொழுது விமான நிலையத்தில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ வைரல் ஆனது.

இந்த நிலையில், லால் சலாம் படத்தின் புதிய அப்டேட்டை தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் வெளியிட்டுள்ளது. லால் சலாம் போஸ்டரை தற்போது வெளியிட்டுள்ளனர். அதில், மும்பை பின்னணியில் இஸ்லாமிய தோற்றத்தில் ரஜினிகாந்த் நடந்து வருவது போல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மொய்தீன் பாய் ஆட்டம் ஆரம்பம் எனவும் போஸ்டரில் குறிப்பிட்டுள்ளனர்.

அதே சமயம், சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும் எனவும் பதிவிட்டுள்ளனர். தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படம் இஸ்லாமியர்களை தவறாக சித்தரிக்கிறது என்ற சர்ச்சை எழுந்துள்ள நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் போஸ்டர் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக வெளியாகி உள்ளது.

  • Dhanush new movie announcement தனுஷ் காட்டில் வெற்றிமழை தான்…அடுத்த பட குறித்த அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்…!