கஞ்சா விற்பனையில் கொடிகட்டி பறந்த திமுக பிரமுகரின் மகன்.. கூட்டாளிகளோடு மடக்கி பிடித்த போலீசார்..!!

Author: Babu Lakshmanan
8 May 2023, 12:08 pm

தர்மபுரி ; பொம்மிடி அருகே கஞ்சா வைத்திருந்ததாக திமுக பிரமுகரின் மகன் உள்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி அடுத்ல பொம்மிடி அருகே ஒட்டு பள்ளம் எனும் பகுதியில் இன்று பொம்மிடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் விக்னேஷ் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து, அவர்களின் கையில் இருந்த பையினை சோதனை செய்தனர். அதில் ஒன்றரை கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது.

இதனையடுத்து, அவர்களிடம் விசாரணை செய்ததில், பொம்மிடி அருகே உள்ள பி.பள்ளிப்பட்டி கிராமத்தின் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், தருமபுரி திமுக மேற்கு மாவட்ட செயலாளருமான பி.பழனியப்பனின் உதவியாளராக இருப்பவருமான பொன்மணி என்பவரின் மகன் ஜெயசூர்யா (வயது 21) என்பதும், இவர் தான் இப்பகுதியில் முக்கிய புள்ளியாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது.

இவருடன் அதே பகுதியை சேர்ந்த குமார்‌ என்பவரின் மகன் அரவிந்த் குமார் (வயது 21), பாலன் என்பவரின் மகன் சேட்டு (வயது 22) ஆகியோர், வெளியூரில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து, இந்தப் பகுதியில் சிறு சிறு பாக்கெட்டுகளாக அடைத்து விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது.

அதனை தொடர்ந்து, அவர்களிடம் இருந்து 11 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்புள்ள ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் அவர்களை கைது சிறையில் அடைத்தனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 459

    0

    0