90ஸ் வில்லன் ‘சண்டா மாத்ரே’… முரட்டு வில்லனாக வலம் வந்த பிரபலமா இது?

Author: Udayachandran RadhaKrishnan
8 May 2023, 4:02 pm

சினிமாவில் கொடிகட்டி பறந்த பிரபலங்கள் வாழ்க்கையின் இறுதியில் கண்ணீர் வர வைக்கும அளவுக்கு மரணமடையும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

90களில் வெளியான படம்தான் அம்மன். தெலுங்கில் வெளியான இந்த படம் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியானது. பயங்கர ஹிட் அடித்த இந்த படத்தை 90ஸ் கிட்ஸ்களால் மறக்க முடியாதது.

மிரட்டலான நடிப்பில் ரம்யா கிருஷ்ணனும், அம்மன் குழந்தை நட்சித்தரமாக வலம் வந்த சுனயானா, சௌந்தர்யா என எல்லா கதாபாத்திரங்களும் பேசப்பட்டது.

முக்கியமாக வில்லனாக நடித்தவர் ராமி ரெட்டி. மந்திரவாதியாக வலம் வந்த அவர் முரட்டு வில்லனாக மிரட்டியிருப்பார். சண்டா மாத்ரே என்ற ஒற்றை வசனம் இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தது.

ராமி ரெட்டி தெலுங்கு, கன்னடா, மலையாளம், இந்தி, தமிழ் என பல மொழி படங்களில் நடித்துள்ளார். நடிப்புக்கு வரும் முன் பத்திரிகையாளராக பணிபுரிந்த அவர், அனுக்ஷம் படத்துக்காக நந்தி விருது பெற்றவர்.

52 வயதான போது நுரையீரல் மற்றும் சிறுநீரக பாதிப்பால் உயிரிழந்தார். இறுதி நாட்களில் எலும்பு தோலுமாக காட்சியளிக்கும் புகைப்படம் காண்போர் கண்களை ஈரமாக்கி வருகிறது.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 996

    7

    3