அதிமுக பொதுச்செயலாளரான பின் முதல்முறையாக எடப்பாடி பழனிசாமி திடீர் விசிட் : உற்சாக வரவேற்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
8 May 2023, 7:59 pm

வரும் 2024 தேர்தலில் 40க்கு 40 வென்றெடுக்க தமிழக அரசியல் கட்சிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. தற்போதில் இருந்தே பல்வேறு வியூகங்களுடன் களபணியாற்றி வருகின்றனர்.

பாஜக அதிமுக கூட்டணி தொடரும் என அமித்ஷாவும், இபிஎஸ் ஆகியோர் அறிவித்துள்ளன. இந்த நிலையில் ஓபிஎஸ்சை கூட்டணியில் சேர்க்க வைக்க அமித்ஷா தரப்பில் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது

ஆனால் ஓபிஎஸ், திமுகவில் பீ டீம் என இபிஎஸ் கூறிவருவதால் ஓபிஎஸ்சிடம் பேச்சுவார்த்தை நடத்த அமித்ஷா யோசித்து வருவதாக கூறப்படும் நிலையயில், முதலமைச்சரின் மருமகனை ஓபிஎஸ் சந்தித்து பேசியதாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது,

இதனிடையே இன்று ஓபிஎஸ் டிடிவி தினகரனை நேரில் சந்தித்து பேசியுள்ளது தமிழக அரசியிலில் பதற்றத்தை எகிர வைக்கிறது.

இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளராக தேர்வான பின் எடப்பாடி பழனிசாமி முதன்முறையாக திருப்பதி கோவிலுக்கு விசிட் அடித்துள்ளார்.

தமிழக எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஏழுமலையான் தரிசனத்திற்காக குடும்பத்துடன் இன்று மாலை திருப்பதிக்கு வந்தார்.

திருப்பதி மலையில் உள்ள விஐபி கெஸ்ட் ஹவுஸ் ஒன்றில் அவரை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்றனர். இன்று இரவு திருப்பதி மலையில் தங்கும் அவர் நாளை காலை ஏழுமலையானை வழிபடுகிறார்.

  • pa ranjith in the discussion of directing palwankar baloo biopic பிரபல கிரிக்கெட் வீரரின் பயோபிக்கை இயக்கும் பா.ரஞ்சித்? ஆச்சரிய தகவல்