நடுரோட்டில் திருநங்கையின் சேலையை பிடித்து இழுத்து போதை ஆசாமி அத்துமீறல் : வேகமாக பரவும் சிசிடிவி காட்சி!!!
Author: Udayachandran RadhaKrishnan8 May 2023, 8:29 pm
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு ரயில் நிலையம் அருகே மது போதையில் இருக்கும் இரண்டு ஆண்கள் அவ்வழியே சென்ற திருநங்கையை தாக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
அந்த சிசிடிவி காட்சிகளில் மது போதையில் இருக்கும் இரண்டு ஆண்களில் ஒருவர் திருநங்கையை சேலையைப் பிடித்து இழுத்து கீழே தள்ளுகின்றார்
பின்னர் அந்த திருநங்கையை காலால் எட்டியும் உதைக்கின்றார் மேலும் மீண்டும் எழுந்து செல்லும் திருநங்கையை துரத்தி தலை முடியை பிடித்து மீண்டும் அடிக்க தொடங்குகிறார்.
இச்சம்பவத்தின் போது அந்த திருநங்கையும் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் பொது வெளியில் திருநங்கை ஒருவர் மானபங்கம் படுத்தப்பட்டு தாக்குதல்குள்ளான சம்பவத்திற்கு சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து வீடியோவை சமூக வலைதளங்களில் தானே வைரலான நிலையில் ஒரு மணி நேரத்தில் கொடைரோடு அருகே மாவுத்தான்பட்டி சேர்ந்த கார்த்திக்ராஜா-வை அம்மயநாயக்கணூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.