மது வாங்குவதில் தகராறு.. செருப்பால் மாறி மாறி அடித்துக் கொண்ட இரு தரப்பினர் : ஷாக் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
8 May 2023, 9:52 pm

வேலூர் மாவட்டம் வேலூர் அடுத்த பென்னாத்தூர் பேரூராட்சி அலுவலகம் அருகே தமிழக அரசு டாஸ்மார்க் கடை எண் 11120,11340 ஆகிய இரு கடைகள் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று இந்த டாஸ்மாக் கடைக்கு மது வாங்குவதற்காக இரு தரப்பினர் வந்துள்ளனர். இதில் இரு தரப்பினரிடையே ஒருவருக்கு ஒருவர் வாய் தகறாறு ஏற்பட்டு வாய் தகறாரு முற்றி கைகளைப்பாக மாறியது.

இந்த நிலையில் ஒருவரை ஒருவர் மாறி மாறி செருப்பால் அடித்தும் மற்றும் ஒருவரை ஒருவரை ஒருவர் தகாத வார்த்தைகளால் பேசும் வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வேலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

பொதுமக்கள் அதிக நடமாடும் அரசு பேரூராட்சி அலுவலகம் மற்றும் அப்பகுதி மக்கள் அதிகம் நாடிச் செல்லும் நூலகம் அருகே நடைபெறும் சம்பவங்களால் பொதுமக்கள் பெண்கள் கல்லூரி செல்லும் மாணவிகள் பெரும் அச்சத்திலும் பிதியிலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!