பிளஸ் 2 ரிசல்ட்டை பார்த்த மாணவன் தற்கொலை.. செய்தி கேட்டு நள்ளிரவில் காதலி எடுத்த விபரீத முடிவு ; சென்னையில் அதிர்ச்சி..!

Author: Babu Lakshmanan
9 May 2023, 10:06 am

சென்னை : ஆவடியில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவன் தற்கொலை செய்து கொண்டதை தொடர்ந்து, அவரது காதலி விபரீத முடிவை எடுத்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் நேற்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இந்தத் தேர்வில் சுமார் 7 லட்சத்து 50 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜுன் 19ம் தேதி மறுதேர்வு நடத்தப்படுகிறது.

மேலும், தேர்ச்சி பெறாத மாணவர்கள் எந்தவித விபரீத முடிவை எடுக்கக் கூடாதும் என்றும், மேலும் மனநல ஆலோசனை தேவைப்படுவோருக்கு இலவச ஆலோசனை வழங்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சென்னையை அடுத்த ஆவடியில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த தேவா என்ற மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, திருவள்ளூர் மாவட்டம் செம்பரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவி, நேற்று இரவு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வீட்டை உள்பக்கமாக பூட்டிக் கொண்டு நீண்ட நேரமாக திறக்காததால் சந்தேகமடைந்த உறவினர்கள், ஜன்னல் வழியாக பார்த்தபோது, தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது, பிளஸ் 2 பொதுத்தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்து கொண்ட ஆவடியைச் சேர்ந்த தேவா என்ற மாணவனை, இந்த மாணவி காதலித்ததும், அந்த வேதனையில் தற்கொலை செய்ததும் தெரிய வந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

  • Rajkumar Periyasamy Pan-India Film ஒரே படம் ஓஹோ-னு வாழ்க்கை…பாலிவுட்டில் களம் இறங்கிய அமரன் பட இயக்குனர்..!
  • Views: - 445

    0

    0