கோவை மக்களுக்கு குட்நியூஸ்… வந்தாச்சு புதிய செல்ஃபி பாயிண்ட்… INDIAN MADE EIFFEL TOWER எனப்படும் ‘மீடியா ட்ரீ’ திறப்பு…!!

Author: Babu Lakshmanan
9 May 2023, 5:05 pm

கோவையில் அமைக்கப்பட்டுள்ள மீடியா ட்ரீ எனப்படும் எல்இடி டவர், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது.

கோவை மாநகர் ரேஸ்கோர்ஸ் (RACE COURSE) மாடல் சாலையில் ‘மீடியா ட்ரீ’ (MEDIA TREE) என்னும் எல்இடி டவர் அமைக்கப்பட்டுள்ளது. இதனை KCP INFRA LIMITED நிறுவனம் வடிவமைத்துள்ளது. கோவைக்கு பெருமை சேர்க்கும் விதமாக இருக்கும் மீடியா ட்ரீயை அமைக்கும் பணிகள் நிறைவடைந்த நிலையில், அமைச்சர்கள் கேஎன் நேரு, செந்தில்பாலாஜி ஆகியோர் நேற்று திறந்து வைத்தனர்.

சிங்கப்பூரில் புகழ்பெற்ற ‘கார்டன்ஸ் பை தி பே’ பூங்காவில் உள்ளது போல, ஆசியாவிலேயே முதன்முறையாக புதிய தொழில்நுட்பத்துடன் SLOPED LED SCREEN டெக்னாலஜியைக் கொண்ட எல்இடி விளம்பரப் பலகை இந்த மீடியா ட்ரியில் பொருத்தப்பட்டுள்ளது. 8K டெக்னாலஜியுடன், நேரலையாக ஒளிபரப்பு செய்யும் திறன் கொண்டது. இதன்மூலம், விழிப்புணர்வு அறிவிப்புகள், மாநகராட்சி அறிவிப்புகள், விளம்பரங்கள் மற்றும் வீடியோக்களை ஒளிபரப்பச் செய்ய முடியும்.

அதுமட்டுமில்லாமல், மொத்தம் 5,000 LED NODES-களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகையில், ஒரு மில்லியன் வண்ண நிறங்கள் மாறுபாடு கொண்ட தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. பாரிஸ் நகரத்தில் உள்ள ஈவ்விள் டவரைப் போல FLICKERING EFFECT பயனும் உள்ளது.

கோவையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளில் பல அம்சங்கள் இடம்பெற்றிருந்தாலும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஈவ்விள் டவர் என அழைக்கப்படும், இந்த மீடியா ட்ரீ பொதுமக்களை பெரிதும் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • Mammootty replaced in Baasha Movieரஜினியுடன் மம்முட்டி நடிக்க வேண்டிய இன்னொரு படம்.. பறிபோன வாய்ப்பு!
  • Views: - 402

    0

    0