பெண்ணின் ஆடையை விலக்கி பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் பிரமுகர் : அதிர்ச்சி சம்பவம்!!!

Author: Udayachandran RadhaKrishnan
10 May 2023, 1:51 pm

பெண்ணின் ஆடையை விலக்கி பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் பிரமுகர் : அதிர்ச்சி சம்பவம்!!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள நாயுடுபுரத்தை சேர்ந்தவர் அப்துல் கனிராஜா (வயது 55). இவர் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகவும் கொடைக்கானல் ஹோட்டல் மற்றும் ரிசார்ட் உரிமையாளர்கள் சங்க தலைவராகவும் உள்ளார் .

இவருக்கு சொந்தமான தங்கும் விடுதிகள் நாயுடுபுரம் பகுதியில் உள்ளது. இங்கு கடந்த 7ஆம் தேதி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் அவரது மனைவி உள்ளிட்டோர் இரண்டு அறைகள் எடுத்து தங்கி இருந்தனர்.

இந்நிலையில் வழக்கறிஞர் மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால் உடன் வந்தவர்கள் சுற்றுலா இடங்களை கண்டுகளிக்க சென்ற நிலையில் உடல்நிலை சரியில்லாததை கேள்விப்பட்டு அப்துல் கனி ராஜா அவரது அறைக்கு சென்று மருத்துவ உதவி செய்வதாக கூறி பாலியல் தொல்லை அளித்ததாக வழக்கறிஞர் மனைவி கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதன் அடிப்படையில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து அப்துல் கனிராஜாவை கைது செய்தனர். தொடர்ந்து காவல் நிலையத்தில் விசாரணை நடத்தி வந்த நிலையில் மேல் விசாரணை நடத்துவதற்காக திண்டுக்கல் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சந்திரன்,கொடைக்கானல் காவல் துணை கண்காணிப்பாளர் சீனிவாசன் தலைமையில் விசாரணை நடத்தினர்.

அப்துல்கனி ராஜாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்காக கொண்டு சென்றனர். அப்போது காவல் நிலையத்தில் வாசலில் அவர் மயங்கி விழுந்தார்.

அவரை மீட்ட அவரது உறவினர்கள் மற்றும் காவல் துறையினர் கொடைக்கானல் அரசுமருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து பல மணி நேரத்திற்கு பிறகு நீதி மன்றத்தில் காவல் துறையினர் ஆஜர் படுத்தினர். தொடர்ந்து அவருக்கு 15 நாள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

  • Vidamuyarchi movie bookings அஜித்தின் விடாமுயற்சி கொண்டாட ரெடியா…படத்தின் புக்கிங் ஓபன்..குஷியில் ரசிகர்கள்..!
  • Views: - 729

    0

    0