முகம் வீங்கி ஆள் அடையாளமே தெரியாமல் குண்டாக மாறிய சூர்யா.. மும்பையில் செட்டிலானதும் இப்படி ஆயிட்டாங்களே..!

Author: Vignesh
10 May 2023, 4:29 pm

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக சூர்யா தற்போது மும்பையில் புதிய பிசினஸ், திரைப்படம் என அக்கட தேசத்தில் செட்டில் ஆகிவிட்டார். ஆம், சூர்யா மும்பை விமான நிலையத்தில் பார்க்கிங் ஏலம் எடுத்தார்.

அத்தோடு அங்கு சில வியாபாரங்களை கையில் எடுத்து வருமானம் சம்பாதித்து வருகிறார். அத்துடன் இந்திய அறிமுக படமொன்றில் நடித்து மெகா ஹிட் கொடுத்து பாலிவுட்டிலே செட்டில் ஆக திட்டமிட்டு விட்டாராம்.

surya

சமீபத்தில் தான் சூர்யா மும்பையில் பிரம்மாண்ட வீடு ஒன்றை வாங்கி மனைவி குழந்தைகளுடன் தனி குடித்தனம் சென்றுவிட்டார். மேலும், ரூ. 68 கோடியில் சொகுசு பிளாட் ஒன்றை வாங்கியுள்ளார். 9,000 சதுர அடி கொண்ட அந்த பிரம்மாண்ட பிளாட்டில் கார்டன், கார் பார்க்கிங் உள்ளிட்டவை உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சூர்யாவின் மனைவி ஜோதிகாவும் மலையாளம் மற்றும் இந்தி படத்தின் சூட்டிங்கில் பிஸியாகவும் இருந்து வருகிறார். இதனிடையே, கங்குவா படத்திற்காக புதிய லுக்கில் காணப்பட்ட சூர்யாவின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

surya - updatenews360

அதில், ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு உடல் எடையை ஏற்றி இருக்கிறார். முகம் மாறி உடல் பருமனாக இருக்கும் புகைப்படத்தை பார்த்து சூர்யா ரசிகர்கள் ஷாக்காகி வருகிறார்கள்.

மேலும், சமீபத்தில் ஜோதிகா, சூர்யாவுடன் கங்குவா படத்தில் ஸ்டண்ட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தர் எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. கொடைக்கானல் பகுதியில் கங்குவா படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு ஜோதிகா சென்றதாகவும் பேசப்படுகிறது.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?