இளைஞர்களை குறிவைத்து போதை மாத்திரைகள் விற்பனை.. கோவையில் மாத்திரைகளை விற்ற நபர் கைது… இருவருக்கு வலைவீச்சு..!!

Author: Babu Lakshmanan
11 May 2023, 1:03 pm

கோவை ; போதை மாத்திரை விற்ற வாலிபரை கைது செய்த போலீசார், மாத்திரை அட்டைகள் பறிமுதல் செய்துள்ளனர்.

கோவை சாய்பாபா காலனி அருகே தடாகம் சாலையில் காலியிடம் ஒன்றில் போதைப் பொருள் விற்பதாக போலீசாருக்கு தகவல் தரப்பட்டன. போதை பொருள் விற்கும் நபரை பிடிப்பதற்காக சாய்பாபா காலனி போலீசார் சென்றனர். அப்போது அங்கு போதை பொருள் விற்று வந்த ஹரிஹரன் என்ற 19 வயதுடைய டீன் ஏஜ் வாலிபரை கைது செய்தனர்.

அப்போது போதை பழக்கத்திற்காக பயன்படுத்தப்படும் 80 மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். வாலிபரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். மாத்திரைகள் விற்ற வழக்கில் சம்பந்தப்பட்ட தக்ஷிணாமூர்த்தி, அக்ஷய் என்ற இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

  • Cwc Pugazh Ask Vote To Bigg Boss Contestants நம்ம பொண்ணு பிக் பாஸ்ல ஜெயிக்கணும்.. ஓட்டு போடுங்க : நடிகர் புகழ் வேண்டுகோள்!
  • Views: - 693

    0

    0